சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அச்சாணி" அசையுதே.. மேட்டரே வேறயாமே.. எடப்பாடியிடம் நெருங்கும் மேலிடம்? சைக்கிள் கேப்பில் "சீக்ரெட்"

எடப்பாடி பழனிசாமிக்கு மேலிடத்தில் ஆதரவுகள் எதுவும் கூடிவரவில்லையாம்

Google Oneindia Tamil News

சென்னை: எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக கூட்டணி பிரமாதமாக அமையும் என்றே தெரிகிறது. இதில் ஓபிஎஸ்ஸின் ரோல் என்ன என்பதுதான் இப்போது கேள்வியாக எழுந்துள்ளது.
சில மாதங்களாகவே, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நம்பிக்கை மிகுந்த கருத்துக்களை உதிர்த்து வருகிறார்கள்.. குறிப்பாக, "பாஜக மேலிட ஆதரவு அதிகமாக ஓபிஎஸ் டீமுக்கு அதிகமாக கிடைத்து கொண்டிருக்கிறது..

அதிலும், தமிழகத்தின் பாஜக பொறுப்பாளரே, ஓபிஎஸ்ஸுக்குதான் சப்போர்ட் செய்துவருகிறார்.. எப்படியும், இரட்டை இலை தங்களுக்குதான் கிடைக்க போகிறது என்பதிலும் எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது.. பாஜக சொல்வதை கேட்கும் நிலையில்தான் எடப்பாடி தரப்பு உள்ளதே தவிர, எடப்பாடி சொல்லும் ஐடியாக்களை காது கொடுத்து கேட்கும் நிலைமையில் பாஜக இல்லை" என்று கூறியிருந்தனர்.

திருச்சி சூர்யாவை தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் ஒரு பாஜக ஆதரவாளர் 'கபடி பண மோசடி' புகார்திருச்சி சூர்யாவை தொடர்ந்து அமர் பிரசாத் ரெட்டி மீது மேலும் ஒரு பாஜக ஆதரவாளர் 'கபடி பண மோசடி' புகார்

 ப்ளான் 1

ப்ளான் 1

அதேபோல, அரசியல் நோக்கர்களும், எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வியூகம் குறித்து தங்கள் கருத்துக்களை சொன்னபோதுகூட, "எடப்பாடி பழனிசாமியால் பாஜகவை பகைத்து கொண்டு அரசியல் செய்ய முடியாது.. தன்னை சுற்றியுள்ள வழக்குகள், நெருக்கடிகளில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவாவது, அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு உள்ளது.. இதற்கு பாஜகவின் தயவு கண்டிப்பாக தேவை, எனவே, பாஜகவை தவிர்த்துவிட்டு, கட்சியில் இருக்க முடியாது, நாமக்கல் கூட்டத்தில் பேசும்போதுகூட, அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் பாஜக இடம்பெறாது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லவேயில்லை.. எனவே, பாஜகவின் தயவு எடப்பாடிக்குதான் முதலில் தேவை" என்றார்கள்.

 ப்ளான் 2

ப்ளான் 2

இதற்கு நடுவில் இன்னொரு தகவல் கசிந்தது.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து கொண்டிருந்தால், பாஜக தன் வேலையை காட்ட துவங்கும்.. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கு செக் வைத்து, அதன்மூலம் எடப்பாடியை பணிய வைக்கக்கூடும்.. இதற்காக எடப்பாடி பழனிசாமியின் டாப் 5 ஆதரவாளர்களுக்கும் மேலிடம் குறி வைத்துள்ளது.. அந்த முதல் பொறியில் சிக்கியவர்தான் விஜயபாஸ்கர், இவருக்கு அடுத்தபடியாக சிவி சண்முகம், அடுத்ததாக முனுசாமி என அவர்களின் வலை விரியக்கூடும்.. எனவே, எடப்பாடி பழனிசாமி எப்படியும் பாஜகவின் கோரிக்கைக்கு கட்டுப்படுவார் என்றே முணுமுணுக்கப்பட்டது.

முனுசாமி

முனுசாமி

இப்படியெல்லாம் திசைக்கொரு தகவல்கள் வலம்வந்தநிலையில்தான், ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி, கட்சி சார்பாக அழைக்கப்பட்டிருந்தார்.. அந்த அழைப்பிதழில், "இடைக்கால பொதுச்செயலாளர்" என்ற பதவி குறிப்பிடப்பட்டிருந்தது. இத்தனை நாளும் ஒதுக்கி கொண்டிருந்த மத்திய பாஜக, இப்படி பதவியை குறிப்பிட்டு அழைப்பு விடுத்தது, எடப்பாடி தரப்புக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையனும், "இது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய அங்கீகாரம்.. ஏன் என்றால், நம்மை மட்டும்தான் அழைத்திருக்கிறார்கள்.. இது நமக்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய வெற்றியாகும்" என்று கூறியிருந்தார்.

 கழன்ற அனல்

கழன்ற அனல்

அதாவது, தருமர், ரவீந்திரநாத் போன்ற எம்பிக்கள் ஓபிஎஸ் சார்பாக டெல்லியில் இருக்கும் நிலையில், அந்த முறையிலும் சரி, எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற முறையிலும் சரி, ஓபிஎஸ் அழைக்கப்படவில்லை. இதைதான் செங்கோட்டையன் சுட்டிக்காட்டியதாக தெரிகிறது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தையும் தாண்டி, பாஜக தற்போது அவரிடம் நெருங்கி வந்துவிட்டதாகவும், எடப்பாடியை பாஜகவால் தவிர்க்கவே முடியாது என்றும், ஓபிஎஸ்ஸுக்கு பலமுறை ஆதரவு தந்தும், அந்த வாய்ப்புகளை அவர் பயன்படுத்தி கொள்ளாததால், ஓபிஎஸ்ஸை பாஜக மேலிடம் கழட்டிவிட்டுவிட்டதாகவும் பல்வேறு யூகங்கள் வட்டமடிக்கவும் துவங்கிவிட்டன.

இன்விடேஷன்

இன்விடேஷன்

ஆனால், இப்படியெல்லாம் எதுவுமே இல்லை என்று ஒரு தகவல் கசிந்துள்ளது.. அழைப்பிதழ் விவகாரத்துக்கும், பாஜக தலைவர்களுக்கும் நேரடி சம்பந்தமே இல்லையாம்.. விழாவை ஏற்பாடு செய்ததும், அதற்கான அழைப்பிதழை தயார் செய்ததும் மத்திய அரசின் வெளிவிவகாரத்துறையாகும்.. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்.. நாடாளுமன்றத்தில் அனுபவம் வாய்ந்தவரான தம்பிதுரைக்கு, வெளிவிவகாரத்துறையில் நெருக்கமானவர்கள் பலர் உண்டு.. அந்தவகையில், அதிமுகவுக்கான அங்கீகாரம் வேண்டும் தம்பிதுரை தரப்புதான், அதிகாரிகளிடம் கேட்டதாம்.

 சுப்பீரியர் லீடர்

சுப்பீரியர் லீடர்

அதிமுக பெரிய கட்சி என்பதாலும், எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியே நீடிப்பதாலும், இடைப்பொதுச்செயலாளர் என்ற பதவியை அழைப்பிதழில் குறிப்பிட வேண்டும் என்று தம்பிதுரை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாம். வெளிமாநில அதிகாரிகளுக்கு, அதிமுக உட்கட்சி பூசல் எதுவும் தெரியாத நிலையில், அழைப்பிதழில் அவ்வாறே அச்சிட்டுவிட்டார்களாம். மற்றபடி, இதற்கும் மேலிட தலைவர்களுக்கும் சம்பந்தமில்லை, பாஜக மேலிடம் எப்போதுமே தன்னுடைய கெத்தை விட்டுத்தராது, ஒரு அழைப்பிதழை மட்டுமே வைத்துக்கொண்டு, மொத்த அரசியல் உறவையும் தீர்மானிக்கக்கூடாது என்கிறார்கள்.

ஜோடிப்புகள்

ஜோடிப்புகள்

அதுமட்டுமல்ல, கோர்ட்டில் அதிமுக கேஸ் நடந்து கொண்டிருக்கும்போது, சட்டத்தை தாண்டி எடப்பாடியை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் மேலிட தலைவர்களுக்கு இல்லை, அப்படியே அங்கீகரிப்பதால் அதனால் எந்த பலனும் தற்சமயம் அவர்களுக்கு இல்லை என்கிறார்கள். இந்த அழைப்பிதழ் விவகாரத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, பாஜக தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி நெருக்கமாகிவிட்டார் என்றெல்லாம் பொய்யாக ஜோடித்து காண்பிக்கப்பட்டு விட்டது என்றும் சொல்கிறார்கள்... இதில், எது உண்மை என்று தெரியவில்லை.. ஆக மொத்தம், ஜி20 மாநாட்டில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்ன பேசினார்கள், நம் தரப்பில் என்ன நடந்தது என்பதைவிட, எடப்பாடிக்கு வந்த இன்விடேஷன்தான் இன்னும் பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.

English summary
Can't Edapadi Palanisamy do politics against BJP and what Will OPS do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X