ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செய்ய முடியவில்லையா?.. இனி கவலை வேண்டாம்.. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
சென்னை: ரேஷன் கடைகளில் கைரேகைப் பதிவு செய்வதில் சிரமம் இருப்பதால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மகிழ்ச்சி செய்தியை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மாதம்தோறும் அரிசி, சீனி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
இதுதவிர பொங்கல் பண்டிகை காலத்திலும் சிறப்பு பொருட்கள் வழங்கப்படுகின்றன.சமீபத்தில் கூட மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அடங்கிய 21 பொருட்கள் வழங்கப்பட்டன. இது தவிர ரேஷன் கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்யவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ரேஷன் கடைகள்
தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பையும் ஜனவரி 31-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தற்போது ஜனவரி மாதத்திற்கான பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

கைரேகைப் பதிவு செய்ய முடியவில்லை
ஆனால் பல இடங்களில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரும் ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகைப் பதிவு, இயந்திரங்களில் சரியாக பதிவாகவில்லை என்று தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில் சிரமம் இருந்தது.

இனி கவலை வேண்டாம்
கைரேகை பதிவு செய்ய முடியாததால் பலர் பொருட்கள் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்பி செல்கின்றனர்
இதனால் பழைய முறைப்படி பொருட்களை வினியோகம் செய்யவும் ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதாவது ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டாலும், ரேகையை பதிவு செய்ய முடியாவிட்டாலும் பொருட்கள் வாங்கலாம்.
Recommended Video

அரசின் உத்தரவு இதுதான்
ரேஷன் கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தில் QR-ஐ ஸ்கேன் செய்தும், குடும்ப அட்டையின் எண்ணை பதிவு செய்தும், பதிவேட்டில் ஒப்புதல் பெற்று குடும்பஅட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தடையின்றி உடனடியாக வழங்க அனைத்து நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்களுக்கும் தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications