ரூ.1000 ரூபாய்க்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை.. ஆன்லைனில் விண்ணப்பத்தை பெற முடியுமா?
சென்னை: ரூ. 1000 ரூபாய்க்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிரந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான விண்ணப்பங்கள் இன்றிலிருந்து வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் நேற்றில் இருந்து வழங்கப்படுகின்றன.

மொத்தமாக 17.18 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலும் 10 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து முதல் கட்டமாக 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. பலர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதால் கூடுதலாக விண்ணப்பங்களை அச்சடிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
சென்னையில் மொத்தம் 1,417 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த டோக்கன்களை நேரில் சென்று வாங்க வேண்டியது இல்லை. ரேஷன் கார்ட் அடிப்படையில் வீடு தேடி வந்து டோக்கன், விண்ணப்பம் வழங்கப்படும். உங்களுக்கு ஒருவேளை விண்ணப்பம் வழங்கப்படவில்லை என்றால் நீங்கள் முகாமில் சென்று விண்ணப்பங்களை வாங்கலாம். கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்றில் இருந்து வீடுகளுக்கு நேரடியாக வந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும்.
சந்தேகம்: ரூ. 1000 ரூபாய்க்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பெற முடியுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. ரேஷன் கடை இருக்கும் பகுதியில் நீங்கள் இல்லை.
நீங்கள் வேறு ஊரில் உள்ளீர்கள் என்றால் எப்படி டோக்கன் பெறுவது என்ற குழப்பம் இருக்கும். இதற்காக ஆன்லைனில் ரொக்கம் தரப்படுமா? அப்ளிகேஷன் தரப்படுமா என்று கேள்வி இருக்கும். இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு ஆன்லைனில் அப்ளிகேஷன் பெற முடியாது. நீங்கள் டோக்கன் தரும் போது வீட்டில் இல்லாத பட்சத்தில், உங்கள் ரேஷன் கடையில் சென்று ரேஷன் கார்டை காட்டி டோக்கன், அப்ளிகேஷன் வாங்க முடியும்.
வேறு ஊர்களில் உள்ள ரேஷன் கடைகளில் இதை வாங்க முடியும். உங்கள் ரேஷன் பதிவு செய்யப்பட்டு உள்ள கடைகளில் மட்டுமே இதை வாங்க முடியும். ஆன்லைனில் வழங்கினால் பலரும் டவுன்லோட் செய்து முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளதால், அந்த முறை தடுக்கப்பட்டு உள்ளது.
முகாம்கள்: இந்த டோக்கன்கள் வழங்கப்பட்ட பின் சென்னையில் இதற்காக வரும் 24ம் தேதி முதல் முகாம்கள் தொடங்கப்பட உள்ளன. முதல் கட்டமாக 650 ரேஷன் கடைகளில் விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்பட உள்ளன. முதல் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முடியும். இரண்டாம் கட்ட முகாம் உடனடியாக தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடக்கும். இரண்டு கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மக்களிடம் இருந்து பெறப்படும்.
இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் 3 -4 கடைகளுக்கு ஒரு முகாம் என்று 250 முகாம்கள் முதல் கட்டமாக அமைக்கப்படும். அதன்பின் இரண்டு, மூன்று கட்டங்களில் மற்ற ரேஷன் கடைகளுக்கு முகாம்கள் அமைக்கப்படும். இந்த முகாம்களில் தினமும் 80 முதல் 100 டோக்கன்கள் கொண்ட மக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வாங்கப்படும்.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ரூ.354 கோடி சிங்கப்பெண் திட்டம் யாருக்காக? ரோந்து எங்கே? தமிழகத்தை உலுக்கிய 11 சிறுமிகள்.. அக்கிரமம்












Click it and Unblock the Notifications