கேப்டன் ஆசையா சேர்த்த 3 சொத்தும் போச்சு.. பெட்டி வாங்கியதாக பேய் கதை! இக்கட்டான நிலையில் குடும்பம்!
சென்னை: "தேர்தல் அப்போது எல்லா கட்சிக்கிட்டயும் பெட்டி பெட்டியா வாங்கி இருந்தா கேப்டன் டிவி எங்களை விட்டுப் போய் இருக்காது" என தேமுதிக மாநாட்டில் உருக்கமாக பேசியிருந்தார் கேப்டன் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன். உண்மையில் கேப்டன் குடும்பம் பண நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால்தான் விஜயகாந்த் ஆசையாய் கட்டிய ஆண்டாள் அழகர் கல்லூரியை விற்றதாகவும், அந்த பணமும் இன்னும் முழுதாய் வந்து சேரவில்லை என்கின்றனர் கேப்டன் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை துவங்கி விட்டன. மிக வலிமையாக இருந்த திமுக கூட்டணியில் கூட தற்போது லேசாக முட்டல் மோதல் என தொடங்கி இருக்கிறது.
அதிமுக- பாஜக -பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அடுத்ததாக எந்த கட்சிகள் இணைய போகிறது என்ற தகவல்கள் உறுதியாக இல்லை. இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தேசிய முற்போக்கு திராவிட கழகம் தேமுதிக என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

கேப்டன் விஜயகாந்த்
ஜனவரி 9ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். ஆனால் கூட்டம் முடிந்தும் இன்னும் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. கடைசி நேரத்தில் கூட்டணி பேரத்தை அதிகரிக்கவே இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை பிரேமலதா விஜயகாந்த் பயன்படுத்திக் கொண்டார் என்ற விமர்சனமும் பொதுவெளியில் எழுந்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி சேரும் கட்சிகளிடம் பெட்டி பெட்டியாய் பணத்தை வாங்கிக் கொண்டதாக தேமுதிக மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
விஜய பிரபாகரன் பேச்சு
இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசிய கேப்டன் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் ஆவேசமாக பேசினாலும், ஒரு நேரத்தில் உருக்கமாக பேசினார். அதாவது," பெட்டி பெட்டியாய் பணம் வாங்கிக் கொண்டோம் என சொல்லுகிறார்கள். அப்படி வாங்கி இருந்தால் கேப்டன் தொலைக்காட்சி எங்களை விட்டு போயிருக்காது"என்றார். இதனைக் கேட்டு உண்மையில் பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். மிகப்பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு விஜயகாந்தின் அனல் பறக்கும் பேச்சுகளை ஒளிபரப்பி வந்த அந்த சேனல் என்னவானது? எனக்கு விசாரித்த போது தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அது முடங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
கேப்டன் டிவி முடக்கம்
கேப்டன் தொலைக்காட்சி, கேப்டன் நியூஸ் என இரு சேனல்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்கப்படாமல் கேப்டன் நியூஸ் முழுவதுமாக முடங்கி விட்டது. கேப்டன் தொலைக்காட்சி கேபிள்களில் செட்டாப் பாக்ஸ்களில் ஒளிபரப்பப்படாமல் டிஜிட்டல் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அதாவது யூட்யூப் சேனலாக இயங்கிக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியில் இருந்தபோது வாங்கப்பட்ட உபகரணங்களை கொண்டு தற்போது யூட்யூபில் தேமுதிகவின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.
ஆண்டாள் அழகர் கல்லூரி
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்த் கட்டிய ஆண்டாள் அழகர் கல்லூரி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பிரபலமான கல்வி நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. அதில் இன்னும் பாதி தொகை கூட வரவில்லை எனவும், மீதித் தொகை வந்த பிறகு கேப்டன் தொலைக்காட்சியை மீண்டும் ஒளிபரப்பு செய்ய கேப்டன் குடும்பத்தினர் முடிவெடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறதாக சொல்லப்படுகிறது.
குடும்ப நெருக்கடி
தமிழகத்தின் பிரபலமான அரசியல்வாதி ஒருவர் கல்லூரி விற்பனையில் கிட்டத்தட்ட இடைத்தரகர் போலவே செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் குறிப்பிட்ட கட்சியுடன் கூட்டணிக்கு வந்தால் தான் மீதி தொகை தரப்படும் என அந்த அரசியல்வாதி பேசியதாகவும், இதனால் கேப்டன் குடும்பம் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜயகாந்த் ஆசை ஆசையாய் கட்டிய கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டு, கல்லூரி விற்கப்பட்டு, தற்போது சேனல் முடங்கி விட்டது. உண்மையிலேயே பெட்டி வாங்கி இருந்தால் கேப்டன் குடும்பம் இப்படி நிதி நெருக்கடியில் சிக்கி இருக்காது என்கின்றனர் அவர்களுக்கு நெருக்கமானவர்கள்.
-
அண்ணியின் கெத்து சிரிப்பு.. எரிச்சலான விசிக.. விருதாச்சலத்தில் முகம் மாறிய பிரேமலதா.. நடந்தது என்ன? -
ரசிகர் கொடுத்த சங்கீதா போட்டோ, பார்த்ததும் விஜய் செய்த செயல்.. இது விஜயகாந்துக்காக நடந்த மாற்றமா? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications