எப்படி போய் தலைகுப்புற பள்ளத்தில் "லேன்ட்டாகியிருக்கு" டாக்டர் கார் பாருங்க! சென்னையில் பரபர சம்பவம்
சென்னை: முன்னறிவிப்பின்றி மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தோண்டிய பள்ளத்தில் மருத்துவரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னை அடையார் கஸ்தூரிபா நகர் 3வது தெருவில் சிட்டி டவர் என்ற அடுக்குமாடி அலுவலக கட்டடம் உள்ளது.
Recommended Video
இந்த கட்டிடத்தில் இயங்கி வரும் ஆலன் கரியர் இன்ஸ்டிட்யூட் என்ற நீட் பயிற்சி மையத்தில் மருத்துவ பேராசிரியராக ஆந்திராவைச் சேர்ந்த நாகமல்லையா என்பவர் பணியாற்றி வருகிறார்.

5 அடி பள்ளம்
இந்த நிலையில் இன்று காலை இவர் தனது ஹூண்டாய் க்ரெட்டா காரில் அலுவலகம் வந்து கார் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு தனது அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். பின்பு பணியை முடித்துவிட்டு 6 மணி அளவில் தனது காரை வெளியே எடுத்துள்ளார். அங்கு மாநகராட்சி ஒப்பந்ததார்கள் முன் அறிவிப்பின்றி தோண்டிய 5 அடி ஆழத்திற்கும் அதிகமான பள்ளத்தில் கார் நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்துள்ளது. v

போக்குவரத்து நெரிசல்
இந்த விபத்தால் அந்த சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அடையாறு போலீசார் மற்றும் அடையாறு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்து நெரிசலை சீராக்கினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணை அலுவலகத்தின் வெளியே முன்பு எந்தவித பள்ளமும் இல்லை என்பது தெரியவந்தது.

ஒப்பந்ததாரர்கள் அலட்சியம்
மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் அலுவலகத்தை சுற்றி எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் மழை நீர் பள்ளம் தோண்டியதே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்தது. குறிப்பாக பள்ளத்தை தோண்டி விட்டு அலுவலகம் முடியும் நேரத்தில் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் யாரும் வாகன ஓட்டிகளிடம் புதிதாக தோண்டப்பட்ட பள்ளி எந்தவிதமான முன்னறிவிப்பும் செய்யாமல் இருந்துள்ளனர்.

போலீஸ் விசாரணை
இதனால் வழக்கம் போல பேராசிரியர் காரை ஓட்டி வெளியே வந்தபோது விபத்து நடந்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஒப்பந்தகாரர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்தில் கார் பாதிப்படைந்த நிலையில் யாருக்கும் எந்தவிமான காயமோ அசம்பாவிதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications