அடமானமாக மனைவியை 8 பேரிடம் வைத்து சூதாட்டம் ஆடிய கணவர்.. கடைசியில் இப்படியா நடக்கணும்?
சென்னை: உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக இளம்பெண் தந்த புகாரின் பேரில் மத்திய பிரதேசம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னை வைத்து கணவர் சூதாடியதாக அப்பெண் தந்த புகார் மீரட்டில் மிகுந்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பான விசாரணையும் துரிதமாக கையில் எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த வருடம் உத்தரபிரதேசத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. ராம்பூர் நகரில் வசித்து வரும் கணவர் சூதாட்டத்துக்கு அடிமையானவர்.. பணயமாக எதையும் வைக்கக்கூடியவர்.. ஒருமுறை தன்னுடைய 7 ஏக்கர் நிலத்தையும் வைத்து இழந்துவிட்டார். பிறகு மனைவியின் நகைகளையும் சூதாட்டத்தில் வைத்து இழந்துவிட்டார்.

மனைவியை வைத்து சூதாட்டம்
ஒருகட்டத்தில் தன்னுடைய மனைவியை அடமானம் வைத்து விளையாடினார். அப்போதும் சூதாட்டத்தில் தோற்றார்.
இதனால், தன்னுடைய மனைவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்த தன் நண்பர்களை கணவர் அனுமதித்துள்ளார். தாகத்துக்கு நீர்கூட தராமல் அப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்களை தந்துள்ளனர்..
இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மனைவியின் கை விரலையும் உடைத்து கணவன் சித்ரவதை செய்தார்.. இறுதியில் அப்பெண் அங்கிருந்து தப்பிச்சென்று "112 பெண்கள் உதவி" நம்பருக்கு போன் செய்து, அதற்கு பிறகே போலீசுக்கு விஷயம் சென்று, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.
8 பேர் கொண்ட கும்பல்
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் ஒரு அக்கிரமம் நடந்துள்ளது.. மீரட் பகுதியில் வசித்து வரும் அந்த நபரின் பெயர் டேனிஷ்..
திருமணமான டேனிஷ், குடிப்பழக்கத்திற்கும் சூதாட்டத்திற்கும் அடிமையானவர்.. இதனால் தனது மனைவியை பணயமாக வைத்து விளையாடினார்.. ஆனால், அந்த சூதாட்டத்திலும் தோற்றுவிட்டார். இறுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கும்பல், அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது.
இதனால் உருக்குலைந்து பலவீனமாகி கீழே மயங்கி விழுந்துவிட்டார் அந்த பெண்.. உடனே கணவர் டேனிஷூம், அவரது நண்பர்கள் 8 பேர் கொண்ட கும்பலும், அந்த பெண்ணை தூக்கி ஆற்றில் தூக்கி வீசிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்கள்..
தத்தளித்த பெண்
நீரில் மூழ்கி உயிருக்கு போராடி தத்தளித்தபோதுதான், அந்த வழியாக சென்றவர்கள் அப்பெண்ணை மீட்டனர்.. பிறகு பாதிக்கப்பட்ட பெண் போலீசுக்கு சென்று தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி, புகாரையும் தந்தார்.
அந்த புகாரில், "மீரட்டில் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷ் என்பவரை கடந்தாண்டு அக்டோபர் 24-ல் திருமணம் செய்து கொண்டேன். அப்போதே குடிபோதையில் என்னை வைத்து சூதாட ஆரம்பித்துவிட்டார். எதிர்த்து கேட்டதற்கு அவரும், என்னுடைய மாமியாரும் சேர்ந்து அடித்து உதைத்தனர்.
எனக்கு திருமணம் நடந்த முதல் நாளிலிருந்தே வரதட்சணைக்காக நான் சித்ரவதை செய்யப்பட்டேன். என் கணவர் சூதாட்டத்திற்கு அடிமை ஆகிவிட்டார்.. பணம் கிடைக்கவில்லை என்பதற்காக என்னை பணயமாக வைத்தார். பிறகு 8 பேர் எனக்கு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அபார்ஷன் - மாமனார்
என்னுடைய மாமனார் இதனால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று சொல்லி, என்னுடைய கர்ப்பத்தை கலைத்தவர் என்னுடைய கணவர்.. இப்படி பலமுறை அபார்ஷன் செய்ததுடன், ஆசிட் ஊற்றியும், ஏரியில் தள்ளியும் கொலை செய்ய முயன்றனர்
இப்போதுகூட என்னை கொலை செய்யும் நோக்கத்தில்தான் ஆற்றில் தூக்கி வீசினார்.. அந்த வழியாக சென்றவர்கள் என்னை காப்பாற்றினார்கள்.. நான் போலீசுக்கு வந்து இப்படி புகார் தருவது தெரிந்ததுமே, இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று என்னை அச்சுறுத்துகிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்..
உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் பினோலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் மீரட்டில் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications