திமுகவுக்காக பிரச்சாரம்..ருமேனிய நபருக்கு மத்திய அரசு நோட்டீஸ்.. விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு..!
சென்னை : விசா விதிமுறைகளை மீறி திமுகவுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட ருமேனியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதோடு, சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வு அடைந்துள்ளது.
முன்னதாக தமிழகம் முழுவதும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வேட்பாளர்கள் தொண்டர்கள் பல்வேறு வகைகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ருமேனிய நபர்
இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் வார்டு கவுன்சிலர் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் ருமேனிய நாட்டைச் சேர்ந்த நொகொய்டா ஸ்டீபன் என்ற நபர் பொதுமக்களிடையே திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தை ஏந்தியபடி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொழில் நிமித்தமாக வந்துள்ள ஸ்டீபன் திமுக துண்டை தோளில் அணிந்தவாறு சாலையில் நடந்து சென்றும், இருசக்கர வாகனம் மற்றும் பேருந்துகளில் பயணித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து திமுக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

ஆதரவு
தமிழகம் வந்தபோது திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அக்கட்சிக்கு ஆதரவாக வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்து வருவதாக ஸ்டீபன் மற்றும் அவருடன் வந்த திமுக தொண்டர்கள் தெரிவித்த நிலையில், ருமேனிய நாட்டைச் சேர்ந்த நபர் கோவை மக்களிடையே திமுகவுக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும், பல்வேறு தொலைக்காட்சிகளிலும் செய்தியாக வெளியாகியது.

காட்சிகள் பரவல்
இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை திமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் பரப்பிய நிலையில் தொழில் நிமித்தமாக இந்தியா வந்தவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது குற்றம் என பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். இது குறித்து புகார்கள் அளிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து ஸ்டீபன் ருமேனிய நாட்டு தூதரகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெளியுறவுத்துறை நோட்டீஸ்
இதேபோல இந்தியாவுக்கு தொழில்முறையாக வந்து திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை ஈடுபட்ட நொகொய்டோ ஸ்டீபனுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விசா விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபட்ட அவர் நாளை சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை உத்தரவு பிறப்பித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications