சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

45 நாட்களுக்கு பிறகு... சென்னையில் பெட்ரோல் டீசல் விலை அதிரடியாக குறைந்தது.. இன்றைய விலை எவ்வளவு?

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பை தொடர்ந்து சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. பெட்ரோல், டீசல் விலையில் 45 நாட்களுக்கு பின்னர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

    Petrol Diesel Price Reduced எவ்வளவு? எப்படி? | Nirmala Sitharaman | #National

    நாட்டில் பெட்ரோல், டீசல் மிக கடுமையாக உயர்ந்து வந்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வடைந்தது. இந்த நிலையில் மத்திய அரசு நேற்று அதிரடியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கணிசமாக குறைத்தது.

    பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு - மக்களுக்கு 'இன்ப அதிர்ச்சி’ கொடுத்த மத்திய அரசு!பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு - மக்களுக்கு 'இன்ப அதிர்ச்சி’ கொடுத்த மத்திய அரசு!

    கலால் வரி குறைப்பு

    கலால் வரி குறைப்பு

    இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், பெட்ரோலுக்கான மத்திய கலால் வரி லிட்டருக்கு ரூ 8ம் டீசல் மீதான மத்திய கலால் வரி ரூ 6ம் குறைக்கப்படுகிறது இதனால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ 9.5 அளவுக்கும் டீசல் விலையில் ரூ 7 அளவுக்கும் குறையும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அனைத்து மாநில அரசுகளும், குறிப்பாக 2021 நவம்பரில் இத்தகைய வரிக்குறைப்பு அறிவிக்கப்பட்டபோது தங்களின் பங்காக வரிக்குறைப்பு செய்யாத மாநிலங்கள், இதே போன்று வரிக்குறைப்பை அமலாக்கி சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்க நான் வலியுறுத்துகிறேன்.

    சிலிண்டர் மானியம்

    சிலிண்டர் மானியம்

    பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு (12 சிலிண்டர்கள் வரை ) சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 200 மானியமாக இந்த ஆண்டும் நாங்கள் வழங்குவோம். இது நமது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் உதவி செய்யும். இதனால் ரூ. 6100 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்திருந்தார். மத்திய அரசு சிலிண்டர் மானியத்தை நிறுத்திவிட்டதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

    விலை குறைந்தது

    விலை குறைந்தது

    இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக குறைந்துள்ளது. சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ8.22 குறைந்து ரூ102.63க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 1 லிட்டர் டீசல் விலை ரூ6.70 குறைந்து ரூ94.24 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 45 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 1 லிட்டோர் பெட்ரோல் விலை ரூ8.49 குறைந்து ரூ96.16க்கும் புதுச்சேரியில் 1 லிட்டர் டீசல் ரூ6.69 குறைக்கப்பட்டு ரூ86.33க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வாட் வரி குறைப்பு

    வாட் வரி குறைப்பு

    இதனிடையே கேரளாவில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தது அம்மாநில அரசு குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான வரி ரூ2.41, டீசல் மீதான வரி ரூ1.36ஐ குறைத்து கேரளா அரசு அறிவித்துள்ளது. ஜஸ்தான் அரசும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை 1 லிட்டருக்கு 2.48 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 1.16 ரூபாயும் குறைத்துள்ளது. இதேபோல் மேலும் பல மாநிலங்கள் வாட் வரியை குறைக்கக் கூடும் என்பது எதிர்பார்ப்பு.

    English summary
    After Centre Cuts Excise Duty, In Chennai petrol price Rs 102.63 a litre from today; Diesel Rs 94.24 a litre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X