இன்றே கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. அடுத்த 3 மணி நேரம்.. இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்!
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடப்பதால் சில மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை: வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தொடர்ந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 28ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இதனையடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை கடக்கும் என்பதால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதேபோல வெப்பநிலையும் சுமார் 2-3 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கரையை கடக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
"இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்றிரவு(ஜன.31) 11.30 நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கை-திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 180 கி.மீ தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே சுமார் 440 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று(பிப்.01) காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.

அடுத்த 3 மணி நேரம்
அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலுர் மாவட்டங்கள் மற்றம் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த 3 மணி நேரத்தை பொறுத்த அளவில் நாகப்பட்டினம் , மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

நாளை எங்கெங்கு மழை
நாளை(பிப்.02) தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த அளவில், இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
இந்த அளவு அடுத்த மூன்று நாட்களில்(பிப்.02, பிப்.03 & பிப்.04) ஆகிய தேதிகளில் இந்த வேகம் குறைந்து 55 கி.மீ என்கிற அளவில் காற்று வீசும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேபோல ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கு திரும்பும்மாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications