வெப்பச்சலனத்தால் இடி மின்னலுடன் ஜில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையத்தின் கூல் அறிவிப்பு
வளிமண்டல கீழடுக்கு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் உள் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Recommended Video
தமிழகம் முழுவதுமே பங்குனி மாத வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திர காலம் போல அனல் காற்றும் வீசுகிறது. மாலை நேரங்களில் குளிர்ந்த காற்று வீசி லேசான சாரல் மழை பெய்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை, குமரி மாவட்டம் பெருஞ்சானி, சிலலோகம் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, புத்தன் அணை, சாத்தான்குளம் பகுதிகளில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. பாம்பம், உசிலம்பட்டி. ஏலகிரி, கொடைக்கானல், திண்டுக்கல் பகுதிளில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

இடி மின்னலுடன் மழை
வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று முதல் 9ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
என அறிவித்துள்ளது.

மிதமான மழை
தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் மழை
10ஆம் தேதியும் 11ஆம் தேதியும் தென் தமிழகம், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேக மூட்டம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.

வெப்பநிலை எவ்வளவு
கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதுரையில் 38.5 டிகிரி செல்சியஸ், ஈரோடு நகரில் 38 டிகிரி செல்சியஸ்,சேலம், வேலூர், திருச்சி, திருத்தணி, தஞ்சாவூரில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications