சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் 7,200 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ரூ.1,050 கோடி மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பாண்டில் கட்டப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்ட அவர் பள்ளிகள் மீது தாம் தனிக்கவனம் செலுத்தி வருவதை உணர்த்தியுள்ளார்.

இது தொடர்பாக சட்டசபையில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

உடல் நடுங்குது..கடப்பாறையை முழுங்கிட்டு காசயம் குடிச்சாங்க.. சட்டசபையில் ஸ்டாலின் சொன்ன சொலவடை உடல் நடுங்குது..கடப்பாறையை முழுங்கிட்டு காசயம் குடிச்சாங்க.. சட்டசபையில் ஸ்டாலின் சொன்ன சொலவடை

பள்ளிக் கல்வித்துறை

பள்ளிக் கல்வித்துறை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடந்த ஓராண்டு காலத்தில் பள்ளிக் கல்வித் துறையானது மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் வண்ணம், காலை உணவுத் திட்டம், (மேசையைத் தட்டும் ஒலி) இல்லம் தேடிக் கல்வி, (மேசையைத் தட்டும் ஒலி) எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என நமது அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டிச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றது.

பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

இந்தச் சூழ்நிலையில், பள்ளிக் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கென அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்புப் பணிகளுக்கென சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியும் என மொத்தம் சுமார் 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் நிதி தேவை என்று கண்டறியப்பட்டு, அவற்றைப் படிப்படியாக ஏற்படுத்தித் தருவதற்கென 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்' என்னும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

புது வகுப்பறைகள்

புது வகுப்பறைகள்

அத்திட்டத்தின்படி, நடப்பாண்டில் சுமார் ஆயிரத்து 430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை நமது அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 15 இலட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளார்கள். (மேசையைத் தட்டும் ஒலி) எனவே, அதிகரித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகளும் உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப்பறைகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

 7,200 வகுப்பறைகள்

7,200 வகுப்பறைகள்

இதனடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் 800 கோடி மதிப்பீட்டில் 6 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1,200 வகுப்பறைகளும் என மொத்தம் ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாகக் கட்டப்படும் (மேசையைத் தட்டும் ஒலி) என்பதை பெருமகிழ்ச்சியோடு இம்மாமன்றத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளிகள் மீது தனிக்கவனம்

பள்ளிகள் மீது தனிக்கவனம்

பள்ளிகளின் பராமரிப்புப் பணிகளுக்கென நடப்பாண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து, தற்போது 115 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளை நாடி வரும் மாணவர்களுக்கு தரமான பள்ளிக் கட்டமைப்பு கிடைக்கப் பெறுவதுடன், பாதுகாப்பான கற்றல் சூழலும் உறுதி செய்யப்படும் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன்.

English summary
Chief Minister Stalin has announced that 7 thousand 200 classrooms will be constructed in Tamil Nadu this year at an estimated cost of Rs.1,050 crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X