ஊரடங்கால் வேலை இழப்பு.. கூலிக்கு பனை மரம் ஏறிய உதவி பேராசிரியர்.. தவறி விழுந்து பலி
சென்னை: கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் பனைமரம் ஏறும் கூலிக்கு சென்று வந்துள்ளார். பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டும் போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி, 2 வயது கைக்குழந்தையுடன் தவிக்கிறார். அவருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்டம் அலமாதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா மிக கொடுமையானது என்றால், அதனால் கல்வி துறையில் ஏற்பட்ட நிலைமை மிக மோசமானது. குறிப்பாக தனியார் பள்ளிகள், தனியார் கல்லூரிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் கடினமான நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மிகவும் வறுமை நிலையில் வசிக்கிறார்கள். வேலை இழந்து, வருமானம் இழந்து கூலிவேலைக்கு சென்று கடினமான காலத்தை கடந்து வருகிறார்கள்.

உயிரிழப்பு
அப்படி ஒருவர் தான் லோகநாதன் (35). இவர் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அலமாதி கிராமத்தில் வசித்து வந்தார். இவரது மனைவி கவிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களுக்கு பிரியன் என்ற 2 வயது குழந்தை உள்ளான்.

கொரோனா ஊரடங்கு
லோகநாதன் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கன்னடபாளையம் நசரேத் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக லோகநாதன் வேலையிழந்தார். இதனால் வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த சிரமப்பட்டார்

தவறி விழுந்தார்
இதையடுத்து குடும்ப வறுமையின் காரணமாக அவ்வப்போது பனைமரம் ஏறி நுங்கு அறுத்து கொடுத்து அதில் கிடைக்கும் கூலியைக் கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம்போல் பனை மரத்தில் ஏறி நுங்கு அறுத்து கொடுக்க முயன்றபோது பனை மரத்தின் உச்சியில் இருந்து லோகநாதன் தவறி விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து, படுகாயமடைந்த லோகநாதனை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

கிராம மக்கள்
ஊரடங்கு காரணமாக வேலையின்றி பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்ட சென்று தனியார் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நிறைமாத கர்ப்பிணியாகவும் 2 வயது கைக்குழந்தையுடன் உள்ள அவரது மனைவிக்கு அரசு உதவ வேண்டும் என்று அலமாதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications