சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பல மாதங்களுக்கு பிறகு.. சென்னையில் கொரோனா கேஸ்கள் எப்படி ஏறுது பாருங்க! ஐசிஎம்ஆர் டாக்டரின் டேட்டா

Google Oneindia Tamil News

சென்னை:பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நான்கு வாரங்களாக கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது எனவும், பொது மக்கள் முக கவசம் அணிதல் கூட்டத்தை தவிர்த்தல் உள்ளிட்ட நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸ் மெல்ல பரவத் தொடங்கி இருப்பதையடுத்து, அதைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகராஷ்டிரா, டெல்லி, கேரளா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம் என இதுவரை மொத்தம் 19 மாநிலங்களில், 550க்கும் மேற்பட்டோர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உசிலம்பட்டியில் ஷாக்! 5 நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்.. பெற்றோர் தலைமறைவு.. பெண் சிசுக்கொலையா? உசிலம்பட்டியில் ஷாக்! 5 நாட்களே ஆன பெண் சிசு மர்ம மரணம்.. பெற்றோர் தலைமறைவு.. பெண் சிசுக்கொலையா?

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்திலும் , அதைத் தொடர்ந்து டெல்லியில் 150க்கும் மேற்பட்டோரும் ஓமிக்ரான் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தெலங்கானா, தமிழகம், குஜராத், கேரளா, ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஓமிக்ரான் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களும் மீண்டும் இரவு நேர ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன.

டெல்லி மும்பையில் பாதிப்பு

டெல்லி மும்பையில் பாதிப்பு

கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் டெல்லி அதிகபட்ச கொரோனா எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. நேற்று 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது கடந்த 6 மாதங்களில் பதிவான எண்ணிக்கையைவிட அதிகமாகும் என கூறியுள்ள சுகாதாரதுறை அதிகாரிகள், இதில் 142 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளனர். இதேபோல் இந்தியாவின் வர்த்தக தலைநகராக கருதப்படும் மும்பையிலும் கொரோனா பரவல் திடீர் எழுச்சியை பெற்றுள்ளது. மும்பையை பொறுத்த அளவில் குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு திடீரென 70 சதவீதம் அளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

சென்னையில் உயரும் பாதிப்பு

சென்னையில் உயரும் பாதிப்பு

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து கூறியுள்ள தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர்' பல மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் 4 வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முகக்கவசம் அணிதல், முதியோர்களைப் பாதுகாத்தல், அரங்குகள் உள்ளிட்ட நெருக்கமான இடங்களில் மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் வேண்டும் எனவும், கூட்டத்தைத் தவிர்க்கவும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

மருத்துவ நிபுணர் எச்சரிக்கை

இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து கூறியுள்ள தேசிய தொற்றுநோய் தடுப்பு மையத்தின் துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் கவுர்' பல மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் 4 வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முகக்கவசம் அணிதல், முதியோர்களைப் பாதுகாத்தல், அரங்குகள் உள்ளிட்ட நெறுக்கமான இடங்களில் மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் வேண்டும் எனவும், கூட்டத்தைத் தவிர்க்கவும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி 2364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி 1959 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய வார பாதிப்பை விட 405 குறைவாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், நவம்பர் 14ஆம் 1665 உள்ளதாகவும், நவம்பர் 28ஆம் தேதி கொரோனா பாதிப்பு 1595 ஆக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி 120 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டு 1715 என்ற எண்ணிக்கையிலும், டிசம்பர் 26 ஆம் தேதி 174 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டு 1889 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கவுர் கூறியுள்ளார். தொடர்ந்து சென்னையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளையும் கூறியுள்ள பிரதீப் கவுர் தமிழக முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி அதிகாரிகளையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.

English summary
Dr Pradeep Kaur, deputy director of the National Center for Epidemiology, tweeted that the number of corona cases in Chennai had been steadily rising for four weeks after several months and that the public should take strict precautionary measures, including wearing face masks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X