சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கண்ணாடி போல் பளபளவென ஜொலிக்கும் நீர்நிலைகள்.. 6,189 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்.. மாஸ் கிளீனிங்!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் நீர் நிலைகளில் தேங்கியிருந்த 6,189 மெட்ரிக் டன் குப்பைகளையும் கழிவுகளையும் மாநகராட்சி அகற்றி சுத்தப்படுத்தியுள்ளது.

Recommended Video

    6,189 மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றிய Chennai Corporation.. அழகாக மாறிப்போன நீர்நிலைகள்

    சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் பொறுப்பேற்றவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி திட்டம் உள்ளிட்டவற்றில் திறம்பட செயல்பட்டு வருகிறார்.

    அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினின் கனவுத்திட்டமான சிங்கார சென்னை 2.ஓ திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பையும் ககன்தீப்புக்கே வழங்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு சென்னைக்கு அசிங்கத்தை ஏற்படுத்தும் குப்பை கூளங்களை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஈடுபடுகிறது.

    பாபர் மசூதியை இடித்த பிறகு முஸ்லீமாக மாறிய மாஜி கரசேவகர் பல்பீர் சிங் திடீர் மரணம்.. போலீஸ் விசாரணைபாபர் மசூதியை இடித்த பிறகு முஸ்லீமாக மாறிய மாஜி கரசேவகர் பல்பீர் சிங் திடீர் மரணம்.. போலீஸ் விசாரணை

    கொசுக்கள்

    கொசுக்கள்

    அதன்படி நீர் நிலைகளில் கொசுக்களை டிரோன் கொண்டு ஒழிக்கும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. வடக்கு, மத்திய, தெற்கு ஆகிய மண்டலங்களில் இது போன்று கொசு ஒழிப்பு பணிகளும் நீர் நிலைகளில் குப்பைக் கூளங்களையும் அகற்றும் பணிகளையும் மாநகராட்சி செய்து வருகிறது.

    6000 மெட்ரிக் டன்

    6000 மெட்ரிக் டன்

    அதன்படி சென்னையில் 30 நீர் வழி கால்வாய்களில் 6,189 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன. இதுகுறித்து சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீா் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீா்வழி கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடு

    வெளிநாடு

    பெருநகர சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறையின் மூலம் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட அதிநவீன இயந்திரங்களான நீா் மற்றும் நிலத்தில் இயங்கும் ஆம்பிபியன் இயந்திரங்கள் மற்றும் ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் நீா்நிலைகளில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    சென்னை மாநகராட்சி

    சென்னை மாநகராட்சி

    கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வரும் 30 நீா்வழி கால்வாய்களில் படிந்திருந்த 6,189 மெட்ரிக் டன் கழிவுகள் மற்றும் ஆகாய தாமரைகள் 2 நவீன ஆம்பிபியன், 3 சிறிய ஆம்பிபியன் மற்றும் 4 ரொபோடிக் எக்ஸவேட்டா் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டுள்ளன என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கண்ணாடி

    கண்ணாடி

    மேலும் நீர் நிலைகள் இதற்கு முன்னர் எப்படி இருந்தது. மாஸ் கிளீனிங்கிற்கு பிறகு எப்படி இருக்கிறது என்ற புகைப்படங்களையும் மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இத்தனை நாட்களாக குப்பை கூளங்களால் தண்ணீரே தெரியாமல் இருந்த கால்வாய்கள் எல்லாம் இப்போது பளபளவென துடைத்த கண்ணாடி போல் காட்சி அளிக்கின்றன.

    English summary
    Greater Chennai Corporation has disposed 6,189 metric tonnes of wastages.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X