கனமழையால் வெள்ளமா? சென்னை மக்களை எச்சரிக்கும் சுரங்கபாதை சிக்னல்கள்.. அசத்தும் மாநகராட்சி.. எப்படி?
சென்னை: சென்னையில் மழை பெய்தால் சுரங்கபாதைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ள நிலையில் அதுபற்றி பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும். இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். மேலும் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதோடு மக்கள் அனைவரையும் படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கும் சூழல் ஏற்படும். கடந்த சில ஆண்டுகளாக இது தொடர் கதையாகி வந்தது. இதனால் இந்த ஆண்டும் கூட சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்தது.

சென்னையில் கனமழை
இந்த கேள்விக்கு மத்தியில் தான் கடந்த மாதம் 29ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. வழக்கத்தை விட பருவமழை தாமதமாக பெய்ய தொடங்கினாலும் கூட ஆரம்பம் முதலே வெளுத்து வாங்கியது. சென்னையின் பல இடங்களில் இடி, மின்னலுடன் தொடர்ந்து மழை பெய்தது. குறிப்பாக பல நாட்களில் மாலையில் துவங்கிய கனமழை விடியவிடிய பெய்து காலை வரை தொடர்ந்தது.

வெள்ள பாதிப்பு உண்டா?
இருப்பினும் கூட சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கவே இல்லை. அதாவது வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முன்கூட்டியே துவங்கியது தான் இதற்கு காரணம். இதன்மூலம் கடந்த காலங்களில் கனமழையால் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் நீர் விரைவில் வடிந்து செல்ல வசதியாக மழைநீர் வடிகால் வசதிகள் செய்யப்பட்டன. இதனால் கடந்த மாதம் இறுதி முதல் தற்போது வரை சென்னையில் கனமழை பெய்தாலும் கூட பல இடங்களில் வெள்ள பாதிப்பு என்பது இல்லை. சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்குகிறது. அதுவும் மோட்டார்கள், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உடனடியாக அகற்றப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

வானிலை நிலவரம் என்ன?
இந்நிலையில் தான் கடந்த 3 நாட்களாக சென்னையில் கனமழை என்பது இல்லை. நேற்றைய நிலவரப்படி சென்னையில் சென்டிமீட்டரில் கூறும் அளவுக்கு எங்கும் மழை பதிவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் கூறியது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என நேற்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மழை குறைந்தாலும் கூட சென்னையில் வெள்ள தடுப்பு பணி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் உள்ளது. வரும் நாட்களில் கனமழை பெய்யலாம் என்பதால் தான் சென்னை மாநகராட்சி அலர்ட்டாக செயல்பட்டு வருகிறது.

சுரங்கபாதைகளில் தேங்கும் நீர்
இந்நிலையில் தான் சென்னையில் வெள்ள அபாயத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்று மாநகராட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னையை பொறுத்தமட்டில் கனமழை பெய்தால் தண்ணீர் தேங்கும் இடமாக சுரங்கபாதைகள் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையின்போது கூட நவம்பர் 7 ம் தேதி சென்னை திநகர் துரைசாமி சுரங்கபாதை, வடசென்னையில் உள்ள வியாசர்பாடி கணேசபுரம் சுரங்கபாதை , சேத்துப்பட்டு-பூந்தமல்லியை இணைக்கும் சுரங்கபாதைகள் மூடப்பட்டன. தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் யாரும் அங்கு செல்லக்கூடாது என்பதற்காக சுரங்கபாதைகள் மூடப்பட்டன.

அலர்ட் செய்யும் சிக்னல்கள்
இந்நிலையில் தான் தற்போது சென்னை மாநகராட்சி நிர்வாகம் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது சென்னையில் உள்ள சுரங்கபாதைகளில் நீர் தேங்கி இருக்கும் அளவை பொறுத்து சிக்னல் மூலம் எச்சரிக்கை செய்ய உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் 16 சுரங்கபாதைகள் உள்ளன. இதில் 11 சுரங்கபாதைகளில் வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிக்னல்கள் வெள்ள எச்சரிக்கையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த உள்ளன. மீதமுள்ள 5 சுரங்கபாதைகளிலும் இத்திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

எப்படி புரிந்து கொள்வது?
அதன்படி மழை காலத்தில் சுரங்கபாதையை கடக்க நினைக்கும் மக்கள் அதில் உள்ள சிக்னல் கம்பங்களை பார்க்க வேண்டும். அதில் பச்சை நிறத்தில் ஒளிரும் விளக்குகளின் அடிப்படையில் சுரங்கப்பாதையை கடக்கலாமா? வேண்டாமா? என்பதை தெரிந்து கொள்ளலாம். அதன்படி சிக்னலில் பச்சை விளக்கு ஒளிர்ந்தால் சுரங்க பாதையில் மழை நீர் இல்லை மக்கள், வாகனங்கள் எளிதாக செல்ல முடியும் என்பதை அது காட்டும். அதேவேளையில் மஞ்சள் விளக்கு ஒளிந்தால் அது தண்ணீர் தேங்கி இருப்பதை குறிக்கும். அதன்படி 10 சென்டிமீட்டர் அளவுக்கு சுரங்கபாதையில் தண்ணீர் இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தும். இதன்மூலம் மக்கள் எச்சரிக்கையுடன் சுரங்கபாதையை கடக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியாக இது அமையும். மாறாக சிவப்பு விளக்கு ஒளிர்ந்தால் அது டேஞ்சர் என்பதை குறிக்கும். அதன்படி முட்டளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை கடப்பது ஆபத்து என்பதை பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்னல்கள் எப்படி செயல்படும்?
மேலும் தற்போது மழை காலங்களில் சென்னையில் மாநகராட்சி சார்பில் கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் சுரங்கபாதைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். சுரங்க பாதைகளில் தேங்கும் தண்ணீரின் அளவு கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு அதற்கேற்ப சிக்னல்களில் விளக்குகள் ஒளிரச்செய்து பாதசாரிகளுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் எச்சரிக்கை செய்யப்படும். மேலும் சுரங்கபாதையில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழைநீர் தேங்கினால் அதனை வெளியேற்றுவதற்கு தேவையான பணியாளர்கள், இயந்திரங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படும் எனவும் மாநகராட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்!












Click it and Unblock the Notifications