விஜய்க்கே தெரியாமல் விஜய் செய்த சூப்பர் காரியம்.. டாக்டர்கள் செய்த சக்சஸ்.. என்ன தெரியுமா?
சென்னை : இருசக்கர வாகனத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த சிறுவனுக்கு பிகில் படத்தை காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இந்த சுவாரஸ்யமான சம்பவம் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனயில் நடந்துள்ளது.
சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் சசிவர்ஷன் (வயது 10) தனது மாமா அரவிந்த் என்பவருடன் கடந்த செவ்வாய்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அண்ணாசாலை அருகே பட்டுலாஸ் சாலையில் அரவிந்த் இருசக்கர வாகனத்தை ஒட்டியபடி வந்த போது எதிர்பாராதவிதமாக தூக்க கலக்கத்தில் இருந்த சிறுவன் சசிவர்ஷன் தவறிவிழுந்தார்.

மருத்துவனையில் அனுமதி
இதில் சிறுவன் சசிவஷர்சனுக்கு முகம் மற்றும் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை உடனே தூக்கி சென்று ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.

அடம் பிடித்த சிறுவன்
அங்கு சிறுவன் சசிவர்ஷனுக்கு நெற்றியல் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால் தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதற்காக சிறுவனுக்கு ஊசி போடுவதற்காக டாக்டர்கள் முயன்றுள்ளார்கள். ஆனால் சிறுவன் பயத்தில் அலறி ஊசி போட விடாமல் அடம்பிடித்துள்ளான். சிறுவனிடம் சிகிச்சை அளிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் மறுத்துவிட்டான்.

விஜய் பிடிக்கும்
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் டாக்டர்கள் தவித்தனர். அப்போது அங்கு இரவு பணியில் இருந்த தன்னார்வலர் ஜின்னா என்பவர் சிறுவனிடம் பேச்சுக்கொடுத்தார். அப்போது சிறுவனிடம் அவர் உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டார். அதற்கு சிறுவன் சசிவர்ஷ்ன் தனக்கு நடிகர் விஜய்யை பிடிக்கும் என்று அழுதபடி கூறியிருக்கிறான்.

வலியை பொருட்படுத்தவில்லை
தனக்கு விஜய்யின் படங்கள். பாடல்கள் எல்லாம் மனப்பாடமாக தெரியும் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து விஜய்யை பற்றியும், விஜய்யின் படங்கள், பாடல்கள் பற்றியும் வலியையும் பொருட்படுத்தாமல் பேசிக்கொண்டே இருந்தான் சிறுவன். அப்போது ஜின்னா தனது செல்போனில் வைத்திருந்த பிகில் படத்தை போட்டு சிறுவனிடம் கொடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரல்
அதை சிறுவன் சஷிவர்சன் வாங்கி கொண்டு உற்சாகமாக படத்தை பார்க்க தொடங்கினான். அந்த நேரத்தில் டாக்டர்கள் அவனுக்கு வலிதெரியாமல் இருக்க மருந்தை செலுத்தி சிகிச்சை அளிக்க தொடங்கினர். வெற்றிகரமாக சிகிச்சையும் அளித்துமுடித்தனர். விபத்தில் காயம் அடைந்த சிறுவனை காப்பாற்றுவதற்காக விஜய்யின் பிகில் படத்தை போட்டு காண்பித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீக்கு நன்றி தெரிவித்து டேக் செய்து வருகிறார்கள்.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!











Click it and Unblock the Notifications