அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு
சென்னை: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி இறப்பிற்கு முதல்வரும் அஜித்தின் நண்பருமான விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்து வாடும் நண்பர் அஜித்துக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.

வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு விஜய் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி, உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. சென்னை பாலவாக்கத்தில் அஜித்தின் இல்லத்தில் அவரது தாயாரின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும்.
அஜித்தின் தந்தை பி.எஸ்.மணி என்கிற பி. சுப்பிரமணியம் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆம் ஆண்டு தனது 85 ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்குமாரின் தாய் மறைவுக்கு திரையுலக பிரமுகர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது: அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.
அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். இவ்வாறு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அது போல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர்
அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் அஜித்குமாருக்கும்,
அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணியின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்". இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அஜித்தின் தாயார் இறப்புக்கு திரையுலக பிரமுகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள். தந்தை இறந்த 3 ஆண்டுகளில் அஜித் தாயையும் இழந்துவிட்டார்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ் -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications