Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தத்தளிக்கும் சென்னை: சில மணி நேர மழைக்கே சாலைகளில் ஆறாக ஓடும் மழை நீர் - பொதுமக்கள் அவதி

அதிகாலை நேரத்தில் பெய்த மழையால் சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிகாலை நேரத்தில் பெய்த கனமழையால் சென்னை சாலைகளில் ஆறாக தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும் ரயில்வே சுரங்க பாலங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில மணி நேர மழைக்கே தண்ணீரில் தத்தளிக்கிறது தமிழக தலைநகரம். வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன்பு மழைநீர் வடிகால் சீரமைப்புபணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் நேற்று அறிவித்தது. வானிலை மையம் கணித்தது போலவே நேற்றிரவு பல மாவட்டங்களில் மழை பெய்தது.

இன்று அதிகாலை முதலே வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. சாரலாக தொடங்கிய மழை இடியும் மின்னலுமாக கொட்டித்தீர்தது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரங்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இடியுடன் கனமழை

இடியுடன் கனமழை

சென்னையில் வில்லிவாக்கம்,கோயம்பேடு,அமைந்தகரை, தியாகராயநகர், அரும்பாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. எழும்பூர்,சென்ட்ரல், புரசைவாக்கம், பெரம்பூர், ஆவடி , பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னை நுங்கம்பாக்கம் , அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், அம்பத்தூர் உள்பப பெரும்பாலான இடங்களில் பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. நுங்கம்பாக்கம் பகுதியில் 45 நிமிடத்தில் 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

மிதக்கும் வாகனங்கள்

மிதக்கும் வாகனங்கள்

கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருவெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம் ரயில்வே சுரங்க பாலங்களில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளதால் கார்கள் மிதந்து சென்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வெள்ள நீரை அப்புறப்படுத்த ரயில்வே சுரங்க பாலம் மூடப்பட்டது. இதனால் அலுவலகங்களுக்கு செல்வோர் சில கிலோமீட்டர்கள் சுற்றிச்செல்ல வேண்டியதாக தெரிவித்தனர்.

வெள்ளநீர் தேங்கியதால் பாதிப்பு

வெள்ளநீர் தேங்கியதால் பாதிப்பு

பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிக மழை பொழிவு இருக்கும். ஆண்டுதோறும் மழை காலங்களில் சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி மாநகரம் தத்தளிக்கும். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளநீரில் சிக்கி பாதிக்கப்படுவார்கள்.

தத்தளிக்கும் சென்னை

தத்தளிக்கும் சென்னை

மழைகாலம் தொடங்க இன்னும் சில மாதங்கள் உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக சில மணி நேரங்கள் எதிர்பாராமல் பெய்த மழைக்கே சென்னை சாலைகளில் ஆறாக பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. முக்கிய சாலையான அண்ணாசாலை, ஓமந்தூரார் மருத்துவமனை அருகே சாலைகளில் வெள்ளநீர் ஆறாக ஒடி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சென்னைவாசிகள் கோரிக்கை

சென்னைவாசிகள் கோரிக்கை

மழைநீர் வடிகால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குவது குறித்து சென்னை மாநகராட்சியினர் பல நடவடிக்கை எடுப்பதாக அவ்வப்போது செய்தி வெளியிட்டாலும் நடைமுறை என்னவோ சென்னையில் சில மணி நேர மழைக்கு நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்கும் முன்பாக மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும் என்று சென்னைவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மின் வாரியம் மின்சார கேபிள்கள் வெளியில் தெரிந்தால் அதை முறையாக சரி செய்து மழை நீரில் மின்சாரம் பாயாமல் தடுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மறக்கமுடியாத வெள்ளம்

மறக்கமுடியாத வெள்ளம்

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஏரிகள் நிரம்பி வழிந்தன. செம்பரம்பாக்கம் நீர்தேக்கம், புழல் ஏரி நிரம்பியதால் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் புறநகர் பகுதிகளில் மூழ்கியது. சென்னை நகர்பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்தது. அடையாற்றில் பெருகிய வெள்ளம் குடியிருப்புகளை மூழ்கடித்தது. வெள்ளம் வடிய பலமாதங்கள் ஆனது. சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் புயல் பாதிப்பும் ஏற்படும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் வலியுறுத்தலாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+