அவ்வளவு தூரம் சொல்லியும் கேட்காத அதிகாரிகள்! இப்போ பாருங்க.. சென்னை நிலைமையை!
சென்னை: நேற்றிரவு பெய்த கனமழையால் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பாதிப்பு தீவிரமாக இருக்கிறது. ஆனால் வெள்ளம் குறித்து முன்கூட்டியே எச்சரித்தும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுகவினர் விமர்சித்துள்ளனர்.
ரெட் எனில் 20 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்யும். ஆனால் சென்னையில் 2 இடங்களில் நேற்றிரவு 30 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவாகியிருக்கிறது. இப்படி மழையின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கிறது.

இதை முன்கூட்டியே கணித்துதான் மராமத்து பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அதிகாரிகள் அதை கேட்கவில்லை என்றும்.. அப்படி கேட்டிருந்தால் நேற்று திருவல்லிக்கேணியிலும், கிளாம்பாக்கத்திலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.
பருவமழை தொடங்குகிறது எனில், அதற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்னாடியே சென்னையின் அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆறுகளில் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு அப்படியான பணிகள் எதுவும் நடக்கவில்லை. அடையாறு ஆற்றில் கருவேல மரங்கள் அப்படியே இருக்கின்றன. கரைகள் பலப்படுத்தப்படவில்லை. இப்படி இருந்தால் நிச்சம் வெள்ளம் ஏற்படும் என்று திமுகவினரும், சூழலியலாளர்களும் கூறி வந்தனர்.
ஆனால் அதிகாரிகள் இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல், மராமத்து பணிகளை மேற்கொள்ளாமல் இருந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இனி வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவே இனியாவது உரிய நடவடிக்கைகளை எடுத்து, மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
வானிலை எச்சரிக்கை
அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதேபோல சென்னையில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
