மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு சிகிச்சை வழங்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அவர்களை பாதுகாத்து உரிய மனநல மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க உத்தரவிடக் கோரி நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கே.வி ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு உப்பு ஏற்றி செல்லும் லாரிகள் மூலம் வெளி மாநிலத்தில் இருந்து பலர் வருகின்றனர்.
இதில் சிலர் மனநலம் பாதிக்கப்பட்டு உணவு, உடைகள் இல்லாமல் அதிகமாக சாலைகளில் சுற்றி திரிவதாகவும், அவர்களால் பொதுமக்களும் அவ்வப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உணவு, உடைகள் இன்றி சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களை கற்களால் தாக்குவதும், கோடியக்கரை வனப்பகுதியில் உள்ள மரங்களை எரித்து விடுவது என தொடர் பிரச்சனைகளை செய்து வருவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சாலைகளில் ஆதரவின்றி சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுக்காக்க கடந்த 2009 ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியது
அதன்படி, சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அந்ததந்த மாவட்ட நிர்வாகம் மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை அளித்து அவர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை வேண்டும்.
ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி வேதராண்யம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மாவட்ட நிர்வாகங்கள் மீட்டு, மனநல சிகிச்சைகளை அளிப்பதில்லை என வழக்கு மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வு, அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் காசிநாதபாரதி ஆஜராகி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், காவல்துறை, அரசு மருத்துவனை நிர்வாகத்திற்கு மனு அளித்தும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிக்கவில்லை என குற்றச்சாட்டினார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க மாவட்ட வாரியாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications