சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க ஹைகோர்ட் மறுப்பு.. மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுக்க பரிந்துரை

Google Oneindia Tamil News

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைப்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சிகள் நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்று நேர்காணல் நடத்தி வருகிறார்கள். கொரோனா தொற்று இப்போது உச்சத்தில் இருப்பதால் இந்த நிலையில் தேர்தலை நடத்தினால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மணிப்பூர்: சிறப்பு முகாம்களில் போராளிகள் வாக்களிக்க வாக்குச் சீட்டு- தேர்தல் ஆணையம் ஒப்புதல் மணிப்பூர்: சிறப்பு முகாம்களில் போராளிகள் வாக்களிக்க வாக்குச் சீட்டு- தேர்தல் ஆணையம் ஒப்புதல்

ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்

ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்

இதனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்குமாறு கடந்த 21 ஆம் தேதி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் நக்கீரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்காநது உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பிடி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம்

அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க கோரி மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் ஆஜராகி வாதிட்டபோது குறுக்கிட்ட நீதிபதிகள், தேர்தல் அறிவிப்பாணையை ஜனவரி 27-க்குள் வெளியிட உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதே எனக் கூறினர். இதற்கு பதில் அளிக்கும் வகையில் மாநில சூழலை பொருத்து தேர்தல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2012-ம் ஆண்டே அனுமதி அளித்துள்ளது என்று மனுதாரர் தரப்பு வாதம் செய்தது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு?

இதையடுத்து மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் எஸ் சிவசண்முகம் ஆஜராகி உச்சநீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான அறிவிப்பை 4 மாதத்தில் வெளியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் அறிவிக்கையை வெளியிட ஜனவரி 27ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைகிறது.

இன்று மீண்டும் விசாரணை

இன்று மீண்டும் விசாரணை

இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு கூறுகையில் கொரோனா கட்டுப்பாடுகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட முடியும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

அதற்கு இருமல் சளிக்கான மருத்துவத்தை மருத்துவர்கள் பரிந்துரைத்ததும் ஒரு காரணம். உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளதால் எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன. அங்குதான் அணுக வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. 5 மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்படுகின்றன. தள்ளிவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது. தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும். மனுதாரர்கள் அனைவரும் சேர்ந்து உச்ச நீதிமன்றம் செல்வதென்றால் செல்லாம். இங்குதான் விசாரிக்க வேண்டுமென்றால் விசாரித்து உத்தரவிடவும் தயார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தக் கூடாது

உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தக் கூடாது

அப்போது மனுதாரர், உச்ச நீதிமன்ற வழக்கில் தாங்கள் இல்லாததால் அங்கு செல்லவில்லை. கால அவகாசம் கோரி தேர்தல் ஆணையம் கோரிக்கை வைக்கலாம். தமிழக முழுதும் 30000 ஆயிரம் தெருக்கள் கொரோனா பாதிப்பால் அடைக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் கெடு விதித்த போது கொரோனா பாதிப்பு தீவிரமாக இல்லை என்றார். உரிய முன்னெச்சரிக்கையுடன் சட்டமன்ற தேர்தல்களே நடத்தப்பட்டு வரும்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்பது வியப்பை ஏற்படுத்துகிறது. மருத்துவர் என்ற முறையில் கொரோனா கட்டுபாடுகளை பிரச்சாரங்களில் எவ்வாறு பின்பற்ற வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமே தவிர தள்ளிவைக்க கோரக் கூடாது என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தனர்.

English summary
Chennai HC is going to hear Urban local body election 2022 as a case filed to cancel the election as corona cases surge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X