தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கை பெண்.. சென்னை மருத்துவமனை ரூ.40 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை!
இலங்கை பெண்ணுக்கு 40 லட்சம் ரூபாயை வட்டியுடன் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தவறான சிகிச்சையால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த பெண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையைச் சேர்ந்த பெண்ணுக்கு, சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 2013ஆம் ஆண்டு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், ரூ. 1.50 கோடி இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தவறான சிகிச்சையால் பாதிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த பெண்ணுக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

இலங்கை பெண்
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த பெண் ஃப்ளோரா. இவர் கருத்தரிப்பு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம் சேர்ந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கருப்பையில் கட்டி வளர்வதாக கூறி அதற்கு லேப்ராஸ்கோபிக் முறையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

மீண்டும் அறுவை சிகிச்சை
அந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர், அடிவயிற்றில் கடுமையான வலி, மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட ஃப்ளோரா, மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது ஒப்புதலைப் பெறாமல் இரண்டாவது அறுவை சிகிச்சையை செய்துள்ளனர். பின்னர், வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர்.

வழக்கு
அப்போதுதான், அவரது பெருங்குடலில் சேதம் ஏற்படுத்தப்பட்ட விவகாரம் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மூன்று முறை அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஃப்ளோரா, நிரந்தரமாக பாதிக்கப்பட்டுள்ளதால், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 1 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

40 லட்சம் + வட்டி
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஜி.சந்திரசேகரன், அந்த தனியார் மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சையால் கடுமையான வலிக்கும், மனஉளைச்சலுக்கும் மட்டுமல்லாமல், நிரந்தரமாக பாதிப்புக்குள்ளான ஃப்ளோராவுக்கு 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த தொகைக்கு, வழக்கு தொடரப்பட்ட 2014ஆம் ஆண்டு முதல் 12 சதவீத வட்டியும் சேர்த்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications