Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெயிலில் உருகிய சென்னை.. 6 ஆண்டுகளில் இன்று “ரெக்கார்ட்” வைத்த சூரியன்! அடேங்கப்பா.. 107.78 டிகிரியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று சென்னையில் அதிகபட்சமாக 107.78 டிகிரி வெப்பம் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

கோடை காலம் தொடங்குவதற்கு முன்பிருந்தே கடந்த மார்ச் முதல் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கடந்த மே மாதம் வெயில் உச்சத்தை தொட்டது. இதற்கு முந்தைய கோடைகளை விட இம்முறை மிகவும் மோசம் என்று மக்கள் புலம்பும் அளவுக்கு வாட்டி வதைத்துவிட்டது.

 Chennai hit highest temperature of 107.78 degree Farenheit over 6 years

மே மாதம் முடிந்துவிட்டது, இனி வெயிலுக்கு குட் பை சொல்லிவிடலாம் என்று நினைத்தால், சென்ற மாதத்தை விட சூடாக இருக்கிறது ஜூன் மாதம். கடந்த மாதம் இறுதியில் அவ்வப்போது மழை எட்டிப்பார்த்து மக்களுக்கு குளிரூட்டிய நிலையில், இந்த ஜூனில் அதுவும் குறைந்து உள்ளது. இந்த நிலையில் இன்று தலைநகர மக்களின் தலையை சூடாக்கி இருக்கிறது வெயில்.

ஆம், கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று வெயில் பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அந்த வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று 42.1 டிகிரி செல்சியஸ், அதாவது 107.78 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் இதைவிட அதிகமாக 42.6 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்து உள்ளது.

வெயிலுக்கு பெயர் போன மே மாதத்தில் கூட சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த அளவு வெப்பம் பதிவாகவில்லை என வானிலை மையம் வெளியிட்டு இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை குறித்த தரவுகள் உள்ளன.

அதில், அதிபட்சமாக கடந்த 2014 ஆம் ஆண்டு 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு 42.6 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது. அதை தொடர்ந்து இன்றுதான் 42.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு பதிவான அதிகபட்ச வெப்ப நிலை 39.8 டிகிரி செல்சியஸ் மட்டுமே. இதன் மூலம் கடந்த 6 ஆண்டுகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பதிவான அதிகபட்ச வெப்ப நிலை இதுவாகும்.

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்." என்று குறிப்பிட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+