சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஐஐடியில் கொரோனா பரவ மாணவர்களின் அஜாக்கிரதை காரணம்- இயக்குநர் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை ஐஐடியில் கொரோனா பரவ காரணம் மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சென்னை: மாணவர்களுக்கு கொரோனா.. ஒட்டுமொத்தமாக மூடப்பட்டது ஐஐடி…!

    சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பரிசோதனை கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. நேற்று வரை 71 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது.

    ஆனால் இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஐஐடி வளாகம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாகவே மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஐடியில் ஆய்வு நடத்தினார்.

    சென்னை ஐஐடி மாதிரியே.. பிற கல்லூரிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை சென்னை ஐஐடி மாதிரியே.. பிற கல்லூரிகளிலும் கொரோனா பரவ வாய்ப்பு- ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

    கொரோனா எப்படி

    கொரோனா எப்படி

    தேசிய அளவில் பிரசித்தி பெற்ற ஐஐடியில் கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து அதன் இயக்குநர் பாஸ்கர ராமமூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஐஐடியில் மாணவர்கள் கொரோனா வழிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. இதுவே இன்று 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியதற்கு காரணமாகும். தற்போது வளாகத்தில் பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

    மாநகராட்சி

    மாநகராட்சி

    இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை ஐஐடி விடுதி வெறும் 10 சதவீத மாணவர்களை வைத்து மட்டுமே இயங்கி வருகிறது. இவர்கள் எல்லாரும் ஆராய்ச்சி மாணவர்கள். இவர்கள் பரிசோதனைக் கூடங்களில் செயல்முறை விளக்கங்களை செய்து பார்க்க வேண்டியவர்கள். ஐஐடி விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது தெரியவந்ததை அடுத்து மாநகராட்சிக்கு ஐஐடி நிர்வாகம் சார்பில் தகவல் கொடுக்கப்பட்டது.

    கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை

    அவர்களும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு கொரோனா சோதனை செய்தனர். அனைத்து மாணவர்களும் அவர் அவர் அறைகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். அது போல் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களுக்கு பேக் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. இந்த மாணவர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் விடுதியில் தங்க அனுமதித்தோம். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகே அனுமதித்தோம்.

    சென்னை ஐஐடி

    சென்னை ஐஐடி

    அரசு ஒப்புதல் அளித்த பிறகு ஆராய்ச்சி பிராஜக்ட்டுகளில் பணியாற்றும் சிலர் சென்னையில் தங்கியிருந்து ஐஐடி பரிசோதனை கூடங்களில் வந்து பணியாற்றுவர். அப்படியிருக்கும் போது இவர்களுக்கான பாதுகாப்பான வழிகாட்டும் நெறிமுறைகளை நாங்கள் வகுப்போம். சென்னை ஐஐடி மாநகராட்சி அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறது.

    அறிக்கை

    அறிக்கை

    கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுகிறது. கொரோனா பாதித்த அனைத்து மாணவர்களும் கிண்டியில் உள்ள கொரோனா சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய உடல்நிலை சீராக உள்ளது என ஐஐடி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    English summary
    Chennai IIT Director Eswara Ramamoorthy says that students have not followed Corona safety measures properly. That is the main reason for IIT becomes cluster.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X