Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு.. அன்புமணி பின்னாலயே சௌமியா.. "இதுக்குதான் பூங்கா வேணும்".. சபாஷ் பாயிண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பூங்கா அமைக்க வேண்டும் என்று பாமகவின் சௌமியா அன்புமணியும் கோரிக்கை விடுத்துள்ளார். பூங்கா அமைப்பதற்கான காரணங்களையும் சௌமியா விளக்கியிருக்கிறார்.

கோயம்பேடு விவகாரம் தலைதூக்கியபோதே, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் லுலு மால் வரப்போவதாக தகவல்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்தன. இதையடுத்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

Chennai Koyambedu Bus Stand and PMK Soumya anbumani explains why koyambedu bus Terminus should be converted into a Park

உடனே அமைச்சர் சேகர்பாபு "இன்னும் கல்யாணமே ஆகாமல், குழந்தைக்கு பெயர் வைப்பதா? இன்னும் அந்த இடத்தை எந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற முடிவை கூட எடுக்காத நிலையில், துபாயில் உள்ள ஒரு சேக்கை மேற்கோள் காட்டி இருப்பது விசித்திரமாக உள்ளது. இந்த வருஷம் முடியும்வரை அன்புமணியின் பெஸ்ட் ஜோக் இதுதான்" என்று கிண்டலடித்திருந்தார்.

மறுப்பு: அமைச்சர் சமயமூர்த்தியும் "ஒரு அரசியல் கட்சியில் இது போன்ற உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கற்பனையான கருத்துகளை தெரிவிப்பதை தவிர்ப்பது நல்லது" என்று கூறி, மறைமுகமாக அன்புமணியை சாடியிருந்தார்.

அன்புமணியின் அறிக்கையையொட்டி, இத்தனை விளக்கங்களும், மறுப்புகளும் தமிழக அரசின் தரப்பில் அடுத்தடுத்து வெளியானதையடுத்து, கோயம்பேட்டில் லுலு மால் என்ற வதந்தி அடிபட்டு போனது.

மீண்டும் அன்புமணி: ஆனாலும் அன்புமணி விடவில்லை.. மறுநாளே விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, கோயம்பேட்டில் பூங்கா வரவேண்டும் என்று கோருவதற்கான காரணத்தையும் விளக்கியிருந்தார்.

அன்புமணி சொல்லும்போது, "இப்போதைய காலகட்டத்தில் மக்களுக்கு உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சினைகளும், பல்வேறு நோய்களும் வருவதற்கு காரணம் உடற்பயிற்சியின்மைதான்.. உடற்பயிற்சி, நடைபயிற்சி போன்றவற்றை செய்ய போதுமான இடம் இல்லாததுதான் உடல் பருமனுக்கு முக்கிய காரணம்.. அதனால், சென்னை கோயம்பேட்டில் பசுமை்பூ்ஙகா வேண்டும்.. கோயம்பேட்டில் வேறு எந்த கட்டுமானங்களும் வரக்கூடாது... அப்படி வந்தால் நாங்கள் எதிர்ப்போம் என்று கூறியிருந்தார்.

விளக்கம்: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பொது பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்று அன்புமணி அன்று வலியுறுத்தியிருந்த நிலையில், அதற்கான விளக்கத்தை சௌமியா அன்புமணி தற்போது தந்துள்ளார்.

"கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு 30 ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்டது. அதில் பூங்கா அமைத்தால், ஆயிரக்கணக்கான மரங்கள் அங்கு வைக்க முடியும். மக்கள் கூடுகின்ற இடமாகவும் மக்களின் மன அழுத்தத்தை போக்குகின்ற இடமாகவும் அந்த பூங்கா அமையும். பெங்களூர், டெல்லி போன்ற பெருநகரங்களில் எல்லாம் பெரிய அளவிலான பூங்காக்கள் உள்ளன. ஆனால் சென்னையில் அது போன்ற பூங்காக்கள் இல்லை" என்று அன்புமணி கோரிக்கைக்கு விளக்கம் தந்திருக்கிறார் சௌமியா.

அபாயங்கள்: முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் அபாயங்கள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி பேசும்போது, "நகர்ப் பகுதிகளில் அதிக அளவிலான மக்கள் தொகை இருப்பதன் காரணமாக நீர்நிலை மேலாண்மை மிகவும் முக்கிய அமைப்பாக உள்ளது. சிறந்த நகர்ப்புற பகுதியை நீர் மேலாண்மையை வைத்துதான் அடையாளப்படுத்த முடியும்.

சென்னையின் நீர் நிலையாக கூவம், அடையாறு, கொற்றலை உள்ளிட்ட ஆறுகள் உள்ளது. அவற்றை தூய்மைப்படுத்தி சென்னையின் குடிநீர் ஆதாரமாக மாற்ற வேண்டும். நீர் மேலாண்மை முறையில் மாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் வருங்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் தண்ணீர் அபாயங்களை எதிர்கொள்ள முடியும்.

சென்னைவாசிகள்: மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக சென்னையில் ஏரி நிலங்களில் வீடு கட்டக்கூடிய சூழல் தற்போதும் நிலவி வருகிறது. அரசு அதிகாரிகள் கூட ஏரி நிலங்களில் வீடு கட்டியுள்ளனர். ஒரு சில கிராமப்புறங்களில் தண்ணீர் இல்லாததன் காரணமாகவே சென்னையை நோக்கி வாழ்வாதாரத்திற்காக காலநிலை அகதிகளாக மக்கள் இடம்பெயர்கின்றனர்" என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தது சென்னைவாசிகளின் கவனத்தை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+