1010 முறை நிற்காமல் எட்டு போட்ட முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் ASIA BOOK OF RECORDS சாதனை
பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டையின் தற்போதய எம்எல்ஏவுமான மா. சுப்ரமணியன் தனது வீட்டிலேயே எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை நான் ஸ்டாப் ஆக ஓடி ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்சில்
சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் சைதாப்பேட்டையின் தற்போதய எம்எல்ஏவுமான மா. சுப்ரமணியன் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகள் படைத்துள்ளார். தற்போது தனது வீட்டிலேயே எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை நான் ஸ்டாப் ஆக ஓடி ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் (asia book of records).
Recommended Video
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மா. சுப்ரமணியன் அவர் தனது பதிவில், 4 மணி 8 நிமிடம் 18 நொடிகள்(22.2 ft✖️15.5 ft) எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை இடைநில்லாமல் (Non stop running) ஓடி,அது நேற்றைக்கு ஆசிய சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு 'ASIA BOOK OF RECORDS'ல் இடம் பெற்றுள்ளதை மகிழ்வுடன் பதிவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் சைதை தொகுதி எம்எல்ஏவுமான ம. சுப்ரமணியன் பல்வேறு இடங்களில் நடந்த 21.1 கிமீ தூர மராத்தான் போட்டிகளில் 112 முறை பங்கேற்று தேசிய அளவிலும் ஆசியா அளவிலும் சாதனை படைத்துள்ளார். இந்த சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டம், சர்வதேச கோல்டன் டிஸ்க் விருது வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக சென்னையில் உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதால் பலரும் தங்களின் உடற்பயிற்சியை வீட்டு மொட்டை மாடியிலேயே செய்து வருகின்றனர். மா. சுப்ரமணியன் தனது வீட்டு மொட்டை மாடியில் எட்டு வடிவ ஓடுதளத்தை வரைந்து தினம் பயிற்சி செய்து வந்தார். இந்த நிலையில் 4 மணிநேரம் எட்டு நிமிடம் 18 நொடிகள் எட்டு வடிவ ஓடுதளத்தில் 1010 முறை நிற்காமல் ஓடி சாதனை படைத்துள்ளார். இது ஆசிய சாதனையாக ஏற்கப்பட்டு ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் கடந்த 18ஆம் தேதி இடம்பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்து அதன் மூலம் சாதனை படைத்துள்ளார் மா.சுப்ரமணியன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications