இந்த 7 மாவட்டங்களில்.. 2 நாளுக்கு மழை வெளுத்துகட்ட போகுதாம்.. குடையோடு ரெடியா இருங்க மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 04.07.2021, 05.07.2021 ஆகிய நாட்களில் கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும்.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

தேனி, திண்டுக்கல்

தேனி, திண்டுக்கல்

06.07.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

கன மழை பெய்யக்கூடும்

கன மழை பெய்யக்கூடும்

07.07.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய(நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?

சென்னையில் எப்படி?

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும். அதிபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மனப்பூண்டி(விழுப்புரம்), முகையூர்( விழுப்புரம்) ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும், பேரையூர்(மதுரை), வால்பாறை(கோவை), திருக்கோவிலூர்(கள்ளக்குறிச்சி) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளது. 04.07.2021 முதல் 08.07.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+