பார்க்கவே பிரம்மாண்டமா இருக்கே.. சென்னையில் உருவாகும் பேருந்து முனையம்.. எங்கே வருது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ நிர்வாகம், மெட்ரோ பணிகள் தவிர்த்து பல இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள், பேருந்து நிலைய புனரமைப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் ரூ.151 கோடி மதிப்பீட்டில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய மந்தைவெளி பேருந்து முனையம் கட்டப்பட உள்ளது.

metro metro chennai

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRI) மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO) இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் (CMAML), மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன சொத்து மேம்பாட்டு கட்டிடத்திற்கான ஒப்பந்தத்தை ரூ.151 கோடி மதிப்பில் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொகை உட்பட) கோரியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 3 வழித்தடம் 3-இல் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு வெளியேறும் கட்டமைப்புகள் தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்திற்குள் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த திட்டத்தின் இன்னொரு சிறப்பம்சமாக.. இந்த நிலத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்தும் நோக்கில் மெட்ரோ இரயில் நிலைய நுழைவுவெளியேறும் இடம், பேருந்து நிறுத்தம் மற்றும் புறப்படும் இடத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டிட அமைப்பு திட்டமிடப்பட்டு உள்ளது. சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சொத்து வளர்ச்சி கட்டடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது

இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

மெட்ரோ கட்டமைப்பும் பேருந்து நிலையமும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகளுடனும் கூடிய இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 29.385 மீட்டர் ஆகும். இதில் இரண்டு கட்டடங்கள் அமையவுள்ளன. இரண்டு கட்டடங்களின் மாடியிலும் சூரிய மின்கல் அமைப்புகள் (solar panels) அமைக்கப்படும். இதன் மூலம் கட்டடத்தின் நிலைத்தன்மை மற்றும் பசுமை கட்டிட தரநிலைகளை பின்பற்றவும் உதவும். இந்த திட்டம் சென்னையில் போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டை (Tamit oriented developmentTUD) நோக்கிய ஒரு முக்கிய படியாகும்.

நில பரப்பளவு மற்றும் கட்டிட பரப்பளவு

நிலம்-1: 1011 சதுர மீட்டர் (1.74 ஏக்கர்), நிலம்-3,994 சதுர மீட்டர் (D.NE ஏக்க நிலம் | இன் மொத்த கட்டிட பரப்பளவு 13,419 சதுர மீட்டர் மற்றும் நிலம் இன் கட்டிட பரப்பளவு 13,966 சதுர மீட்டராகும்.
இரு நிலங்களும் ராமகிருஷ்ண மடம் சாலை மற்றும் அதனுடன் உள்ள இணைப்பு சாலைகளில் இருந்து இருமுக சாலை அணுகுமுறையை பெறும் வகையில் அமைக்கப்படுகின்றன.

இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 14க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும்.

தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வளர வணிக அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெருநிறுவன அலுவலகங்கள். வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன

கோபுரம்- இரண்டு அடித்தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 318 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 96 நான்கு சக்கர வாகனங்களுக்கான வசதிகளை வழங்கும். தரைத்தளத்திலிருந்து ஏழாவது தளங்கள் வரை சில்லறை விற்பனை இடங்கள் வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமைய உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+