என்ன ஸ்பீடு.. அடுத்தடுத்து 3 சிக்ஸர்.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் மெட்ரோ இரயில் பணிமனையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க ரூ.65.80 கோடி ஒப்பந்தமானது இன்று கையெழுத்தானது.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட பணிகளுக்கான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன. அடுத்தடுத்து 3 நிறுவனங்களுடன் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு ரூ. 65.80 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பு கடிதம் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்திற்கு 08.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது.

மாதவரம் பணிமனையில் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் (OCC) அமைப்பதற்கான ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் கட்டிட வேலை, கட்டிடக்கலை உட்பட, இயந்திரம், மின் மற்றும் பிளம்பிங் (MEP), காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) மற்றும் அனைத்து தொடர்புடைய பணிகளும் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன் தலைமையில், சென்னை மெட்ரோ இரயில் தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் மற்றும் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் பி. ராம்பிரசாத் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் ரேகா பிரகாஷ் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
டாடா ஒப்பந்தம்; சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வரும் நிலையில், முக்கியமான சில மெட்ரோ நிலையங்களை அமைக்க டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி டாடா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ நிறுவனம் ரூபாய் 1,204. 87 கோடி வழங்கியுள்ளது. ஓட்டேரி, பட்டாளம், பெரம்பூர் பேரக்ஸ், கெல்லிஸ் உள்ளிட்ட 4 இடங்களில் ரயில் நிலையங்கள் கட்ட டாடா திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.
இங்கே பூமிக்கு கீழே மெட்ரோ பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் தரையோடு தரையாக இருக்கும் வகையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் இங்கே அமைக்கப்பட உள்ளன.
மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் உள்ள பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் உள்ளிட்ட நான்கு நிலையங்களுக்கான ஒப்பந்தம் கடந்த வாரம் தினேஷ்சந்திரா-சோமா நிறுவனத்திற்கு ₹1,063.37 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது டாடா நிறுவனத்திற்கு அடுத்த கட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
முன்னதாக இதற்கான ஏற்பு கடிதம் தினேஷ்சந்திர-சோமா கூட்டு நிறுவனத்திற்கு 02.06.2023 அன்று வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் மற்றும் செம்பியத்தில் பெரம்பூர் மெட்ரோ கிராஸ்ஓவர் நிலையம் என நான்கு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மாதவரம் பால்பண்ணை மற்றும் முராரி மருத்துவமனை (மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ) ஆகிய இரண்டு சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையங்களில் டயாபிராம் சுவர் தவிர மற்ற பணிகள் இந்த ஒப்பந்தத்தில் அடங்கும்.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications