சென்னை நீலாங்கரை வீட்டில் சங்கீதாவை சேர்க்கல.. மனைவியின் கண்ணீரில் நனைந்த விஜயின் மகளிர் வாக்குறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் ஒரு மாபெரும் விடியலை ஏற்படுத்த போவதாக சொல்லி, தவெக என்ற கட்சியை தொடங்கியவர் விஜய்.. இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான பிரத்யேகத் தேர்தல் அறிக்கையை விஜய் வெளியிட போகிறார்.. அதாவது மனைவி சங்கீதாவை கண்ணீரில் நனைய விட்டுவிட்டு, இன்று பெண்களுக்கான நலத்திட்ட அறிக்கையை வெளியிட போகிறார்.. இதுதான் பொதுவெளியில் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது..

பொதுவெளியில் பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் சம உரிமை குறித்து வீரவசனங்கள் பேசப்படும் அதே வேளையில், விஜய்யின் சொந்த வீட்டிலேயே ஒரு பெண் கண்ணீர் கசிந்து வருவது, பலரும் உற்று நோக்கக்கூடியதாக உள்ளது..

Sangeetha Vijay Women s Manifesto TVK Leader

சங்கீதா - விஜய்

நீண்ட நாட்களாக தற்காலிக பிரிவில் இருந்த அவரது மனைவி சங்கீதா, இப்போது விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி, சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரி கோர்ட்டை நாடியிருக்கிறார்.. இது விஜயின் அரசியல் பிம்பத்தின் மேல் பெரும் கேள்விகுறியை ஏற்படுத்தி வருகிறது..,

ஒருபுறம் கோடிக்கணக்கான பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்போவதாக மேடைகளில் முழங்கும் ஒரு தலைவர், தனது வாழ்நாள் முழுவதும் நிழலாக நின்ற மனைவியின் மனவேதனையை சற்றும் உணராமல் இருப்பது எத்தகைய அறம் என்பது புரியாத புதிராக உள்ளது?

தன்னுடைய கணவனின் வெற்றிக்காக பல ஆண்டுகள் அமைதியாக பின்னால் நின்றவர் சங்கீதா.. இன்று அவரை கண்ணீரில் தவிக்க விட்டுவிட்டு, தமிழக பெண்களுக்கு நலம் செய்யப் போவதாக விஜய் கிளம்பி உள்ளது மிகப்பெரிய முரண்பாடாகவே பார்க்கப்படுகிறது..

நடிகையுடன் நெருக்கம்

ஒரு நடிகையுடன் ஏற்பட்ட நெருக்கமே இந்த முறிவுக்கு காரணம் என சொல்லப்படும் நிலையில், இது வெறும் தனிப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, ஒரு பொதுவாழ்வுக்கு வரும் தலைவரின் ஒழுக்கநெறி சார்ந்த விஷயமாகவும் மாறுகிறது.. நாட்டின் பெண்களைக் காப்பேன் என்று வாக்குறுதி அளிக்கும் ஒரு கரங்கள், தன் மனைவியின் உரிமையை காக்க தவறியது ஏன் என்கிற ஆவேசமான கேள்வி பரவலாக எழாமல் இல்லை..

சங்கீதா போன்ற ஒரு பெண்மணி அமைதியாக தள்ளியிருந்தாலே இவ்வளவு சர்ச்சைகள் கிளம்பும் சூழலில், அவர் விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருப்பது விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு பெரும் கரும்புள்ளியாகவே பார்க்கப்படும்.. மனைவியை அழ வைத்துவிட்டு மகளிர் நலத்திட்டங்களை அறிவிப்பது என்பது ஒரு தலைவனின் முதிர்ச்சியற்ற செயலையே காட்டுகிறது..

மகளிர் நலத்திட்ட உதவிகள்

பெண்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை, பாதுகாப்பு திட்டங்கள் எனப் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளை தனது தேர்தல் அறிக்கையில் விஜய் அடுக்கி வைத்திருக்கலாம்.. ஆனால், ஒரு பெண்ணின் மனதை ஆழமாக புண்படுத்திவிட்டு, அதே பெண்களின் வாக்குகளைப் பெறத் துடிப்பது அரசியலின் உச்சக்கட்ட விசித்திரம் என்றே சொல்ல வேண்டும்..

மனைவியின் கண்ணீரில் நனையும் ஒரு தலைவனின் வாக்குறுதிகள், தமிழக பெண்களின் வாழ்வில் உண்மையிலேயே ஒளியேற்றுமா என்பதும் சந்தேகத்துக்குரியதுதான்..

மனைவியின் கண்ணீர்

ஊருக்கே உபதேசம் சொல்லும் முன்பு, தன்னுடைய சொந்த குடும்பத்தில் நீதியை நிலைநாட்டத் தவறியது ஒரு தலைவனுக்கு அழகல்ல என்று பொதுவெளியில் நெட்டிசன்கள் கமெண்ட்களை தெறிக்க விட துவங்கிஉள்ளார்கள்..

அப்படியானால், வெளிச்சத்தில் மின்னும் தேர்தல் அறிக்கைகளை விட, அந்த தலைவனின் தனிப்பட்ட நேர்மையையே மக்கள் இன்று கூர்ந்து கவனிக்க துவங்கி விட்டார்கள் என்றே தெரிகிறது..

சங்கீதா விவாகரத்து கோரியுள்ள இந்த சூழலில், விஜய் வெளியிடப்போகும் மகளிர் நலத்திட்டங்கள் வெறும் காகித பூக்களாகவே மக்களால் பார்க்கப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஒரு பெண் தன் குடும்பத்தின் அச்சாணி என்பார்கள், அந்த அச்சாணியையே முறித்துவிட்டு ஒரு தேசத்தின் பெண்களை காப்பேன் என்பது வேடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது..

நிஜம் வேறு, நிழல் வேறு

தலைவன் என்பவன் சொல்லிலும் செயலிலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பார்கள்.. ஆனால் இங்கே விஜய் காட்டும் பிம்பம் வேறு, நிஜம் வேறாக இருக்கிறது.. லண்டனில் இருந்து வந்து விஜய்யின் வாழ்வை வசந்தமாக்கிய சங்கீதாவின் தற்போதைய நிலை, தமிழக பெண்களின் மத்தியில் ஒருவித பரிதாபத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

அரசியலில் காலடி எடுத்து வைக்கும் ஒருவருக்குக் குடும்பமே முதல் கோட்டையாக இருக்க வேண்டும், ஆனால் அந்தக் கோட்டையையே சரித்துவிட்டு, வெளியூரில் கோட்டையமைக்க துடிப்பது எவ்விதத்தில் நியாயம்?

முரண்பட்ட அரசியல்

நடிகைகளுடனான தொடர்பு குறித்த செய்திகள் வரும்போது, ஒரு தலைவனாக அதை தெளிவுபடுத்தாமல் அல்லது சரிசெய்யாமல், அதே வேகத்தில் மகளிர் தின கொண்டாட்டங்களில் ஈடுபடுவது அவரது பிம்பத்தை மெல்ல சிதைப்பதாகவே உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகீறார்கள்..

தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்று விஜய் எழுதும்போது, தன்னுடைய மனைவியின் பாதுகாப்பு மற்றும் மன அமைதியை அவர் உறுதி செய்தாரா என்கிற கேள்வி ஒவ்வொரு வாக்காளர் மனதிலும் நிச்சயம் எழும் என்பதால், இந்த முரண்பட்ட அரசியல் போக்கு விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.. எனவே, மகளிரை மனம் குளிர்விக்க புறப்பட்டுள்ள விஜய், சங்கீதாவின் கண்ணீருக்கும் விடை தருவாரா????

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+