சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

48 லட்சத்தை ஆட்டையை போட்ட கேங்.. அதிர்ந்து போன எஸ்பிஐ.. சிடிஎம் மெஷினுக்கு தடை.. பகீர் பின்னணி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையை உலுக்கிய எஸ்பிஐ கொள்ளையால் வங்கிகளுக்கு ரூ. 48 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Recommended Video

    48 லட்சத்தை ஆட்டையை போட்ட கேங்.. அதிர்ந்து போன எஸ்பிஐ.. சிடிஎம் மெஷினுக்கு தடை.. பகீர் பின்னணி

    வடமாநில கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் பிடிபடுவார்கள் என்றும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.

    மாங்கனி திருவிழா 2021: பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் கோலாகலம் மாங்கனி திருவிழா 2021: பரமதத்தர் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம் கோலாகலம்

    இந்தியா முழுவதும் எஸ்பிஐ கேஸ் டெபாசிட் மிஷின்களில் (சிடிஎம்) பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று எஸ்பிஐ வங்கி தலைமை பொதுமேலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    கொள்ளை எப்படி

    கொள்ளை எப்படி

    சென்னையில் உள்ள எஸ்பிஐயின் சிடிஎம் ஏடிஎம்களில் பணம் எடுக்கவில்லை என்று நம்ப வைத்து சுமார் 48 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளது மர்ம கும்பல். எப்படி என்றால் பணம் செலுத்தும் மெஷினில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணத்தை எடுக்கும் போது 20 வினாடிகளில் பணத்தை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் உள்ளே சென்றுவிடும். அதன்பின்னர் வாடிக்கையாளர்களின் கணக்கிலேயே அந்த பணத்தை மிசின் வரவு வைத்துவிடும்.

    டெக்னாலஜி குறைபாடு

    டெக்னாலஜி குறைபாடு

    ஆனால் 20 வினாடி முடிந்ததும் பணம் உள்ளே செல்லும் போது, சரியாக சென்சாரை கைகளால் மறைத்து ஷட்டரை அழுத்தி பிடித்து பணத்தை உள்ளே செல்ல விடாமல் எடுத்தால் ஏடிஎம் கேஸ் டெபாசிட் மிஷினுக்கு பணம் எடுத்தது தெரியாது. பணம் உள்ளே சென்றுவிட்டதாக மெஷின் நினைத்துக்கொள்ளும்.இந்த தொழில்நுட்ப குறைபாட்டை பயன்படுத்திதான் நூதனமான முறையில் பல இடங்களில் கடந்த ஒரு வாரத்தில் பணத்தை திருடி உள்ளார்கள் கொள்ளையர்கள்.

    கமிஷ்னர் பேட்டி

    கமிஷ்னர் பேட்டி

    எஸ்பிஐ அதிகாரிகள் சிசிடிவி காட்சியை பார்த்த பின்னர் அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள். சென்னையை உலுக்கிய எஸ்பிஐ கொள்ளை தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் எஸ்பிஐ வங்கி தலைமை பொதுமேலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

    தடுக்கப்பட்டது

    தடுக்கப்பட்டது

    காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறும் போது,. இந்த கொள்ளை சம்பவங்களால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. முழுக்க முழுக்க வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் தமிழ்நாடு முழுவதும் இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. அவற்றை விசாரித்து வருகிறோம்.
    என்ன தொழில்நுட்பத்தில் இப்படி பணத்தை திருடினார்கள் என்பதை வெளியில் சொல்ல முடியாது. ஆனால் ஒரு தொழில்நுட்ப வழி இருந்திருக்கிறது. அதை இப்போது அதிகாரிகள் தடுத்துவிட்டனர். இனி யாரும் அப்படி எடுக்க முடியாது.

    விசாரணை

    விசாரணை

    இந்த கொள்ளை சம்பவங்களின் பின்னணியில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் இருந்து வந்திருக்கிறார்கள். 3 அல்லது 4 பேர் என்று தான் இப்போது வரை தெரிகிறது. இன்னும் கூடுதலான நபர்கள் இந்த சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்களா என்பதை விசாரித்து வருகிறோம். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்.

    சொல்ல முடியாது

    சொல்ல முடியாது

    தற்சமயம் எஸ்பிஐ வங்கிக்கு மட்டும் தான் இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்திருக்கிறது மற்ற வங்கிகளுக்கு கடிதம் அனுப்பி கேட்க போகிறோம். அவர்கள் அளிக்கும் தகவலை பொறுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுபபோம். 17 மற்றும் 18ம் தேதிகளில் இந்த கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. வேறு மாநிலங்களிலும் சில இடங்களில் இந்த மாதிரி நடந்துள்ளது. தனிப்படை அமைத்துள்ளோம். விசாரணை குறித்த தகவலை வெளியில் சொல்ல முடியாது"இவ்வாறு கூறினார்.

    பணம் எடுக்க தடை

    பணம் எடுக்க தடை

    இதனிடையே பணம் கொள்ளை போவதை தடுக்க ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த எஸ்பிஐ வங்கி தலைமை பொதுமேலாளர் ராதா கிருஷ்ணன், இந்தியா முழுவதும் கேஸ் டெபாசிட் மிஷின்களில் பணம் எடுக்க உடடினயாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இனியாரும் அப்படி கொள்ளை அடிக்க முடியாது என்றார்.

    English summary
    chennai Metropolitan Police Commissioner Shankar Jiwal told reporters that the SBI robbery that rocked Chennai had caused a loss of Rs 48 lakh to the banks and no loss to the public. Meanwhile, withdrawals from SBI Case Deposit Machines (CDMs) across India have been temporarily banned.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X