சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. இது என்ன.. தெரு தெருவா உங்க பக்கத்துலயே வருது.. பயப்படாதீங்க சென்னை மக்களே.. மேட்டர் இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை: 4 சக்கரங்களுடன், உங்கள் முட்டி உயரத்திற்கு இருக்கும் ஒரு பொருள், திடீரென, உங்கள் பக்கம் வந்தாலோ, பேசினாலோ அச்சப்பட வேண்டாம். அது நீங்கள் பயப்படும் பொருள் இல்லை. சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ள ரோபோ.

Recommended Video

    ட்ரோன்களைப் போல வீதிகளில் வலம் வரும் சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ள ரோபோ கார் - வீடியோ

    சீனாவின் வுஹான் மாகாணத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும், அந்த நகரம் சீல் வைக்கப்பட்டது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரோபோக்கள் மூலம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    இப்படித்தான், நோய் பரவலை சீனா விரைவாக குறைக்க முடிந்தது. ஏனெனில் ரோபோக்கள் மூலம், கொரோனா ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு பரவுவது இல்லை.
    சென்னை: 4 சக்கரங்களுடன், உங்கள் முட்டி உயரத்திற்கு இருக்கும் ஒரு பொருள், திடீரென, உங்கள் பக்கம் வந்தாலோ, பேசினாலோ அச்சப்பட வேண்டாம். அது நீங்கள் பயப்படும் பொருள் இல்லை. சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ள ரோபோ.

    சீனாவின் வுஹான் மாகாணத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதும், அந்த நகரம் சீல் வைக்கப்பட்டது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரோபோக்கள் மூலம், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன.

    இப்படித்தான், நோய் பரவலை சீனா விரைவாக குறைக்க முடிந்தது. ஏனெனில் ரோபோக்கள் மூலம், கொரோனா ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்கு பரவுவது இல்லை.

    ரோபோ அறிமுகம்

    ரோபோ அறிமுகம்

    இதேபோன்ற நடைமுறையை, சென்னை காவல்துறை, கையில் எடுத்துள்ளது. கண்டெய்ண்மென்ட் எனப்படும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களை கண்காணிக்கவும், கையாளவும், மல்டி செயல்பாடுகளைக் கொண்ட ரோபோவை, சென்னை நகர காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

    மயிலாப்பூர்

    மயிலாப்பூர்

    ரிமோட் கண்ட்ரோலைப் பயன்படுத்தி இதை இயக்கலாம். கண்காணிப்புக்கு வசதியாக இந்த ரோபோவில், கேமரா உள்ளது. Robot Cop LD v5.0 எனப்படும் இந்த ரோபோ மைலாப்பூரில் உள்ள மீனம்பாள்புரம் தெருவில் பயன்படுத்தப்பட்டது. இங்கு 11 க்கும் மேற்பட்ட COVID-19 கேஸ்கள் உள்ளன. சற்று நெரிசலான பகுதி இதுவாகும். எனவே இங்கு ரோபோவை காவல்துறை களமிறக்கியுள்ளது.

    மைக் அறிவிப்பு

    மைக் அறிவிப்பு

    சென்னை, கிழக்கு மண்டல, இணை போலீஸ் கமிஷனர் ஆர். சுதாகர், இதுபற்றி கூறுகையில், "கண்டெய்ண்மென்ட் மண்டலங்களில், நாங்கள் தெருத் தெருவாக, நுழைந்து அங்கு நடப்பதை பார்வையிட முடியாது. எங்கள் ஊழியர்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு வெளியே நிற்க வேண்டியிருந்தது. எனவே கண்காணிக்கவும், மைக் மூலம், அறிவிப்புகளை வெளியிடவும் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    4 நாட்களில் ரோபோ

    Robothoughts அமைப்பு, SCI Fi Innovation, மற்றும் Callidai Motorworks ஆகியவை காவல்துறையுடன் இணைந்து, வெறும் நான்கே நாட்களில், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளது. துல்லியமான இயக்கத்திற்கான ஸ்டீயரிங் கட்டுப்பாடு, புஷ் செய்திகளுக்கான எல்.ஈ.டி திரை, நேரடி பொது அறிவிப்புகளுக்கான இரு வழி இண்டர்காம் மற்றும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் இணைப்பு போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

    English summary
    Chennai police has introduced Robot to monitor coronavirus hit areas.
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X