சென்னையில் சொத்துவரி தாறுமாறு உயர்வு.. 3 முதல் 4 மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு அதிகமாக வந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எவ்வித காரணமும் இன்றி முறையான அறிவிப்பு இல்லாமல் சொத்து வரியை 4 மடங்கு உயர்த்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சொத்து வரி என்பது தனிநபர் அல்லது நிறுவனத்தின் சொத்துகள் மீது விதிக்கப்படும் வரி. பொதுவாக அந்த நபர் அல்லது நிறுவனத்திற்கு சொந்தமான இடத்திற்கு அரசு வரியை விதிக்கும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி , நகராட்சி மற்றும் மாநகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டிடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றிற்கு செய்யப்படும் வரி விதிப்பு சொத்து வரி எனப்படுகிறது.

property tax chennai Tamil nadu

அதன்படி தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கட்டிடங்களின் ஆண்டு வாடகை மதிப்பின் அடிப்படையில் சொத்துவரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. கட்டிடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப சொத்து வரி விதிக்கப்படும். சொந்தமாக வீடு, கட்டிடம், வணிக நிறுவனம் போன்றவற்றை வைத்துள்ளவர்கள் சொத்துவரி செலுத்த வேண்டியது கட்டாயம்.

சென்னை மாநகராட்சியின் பிரதான வரி வருவாயாக சொத்து வரி உள்ளது. மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிப்பு முகாம் கடந்த 3 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை வாழ் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூபாய் 5,000 சொத்து வரி கட்டிய கட்டிட உரிமையாளருக்கு தற்போது ரூ.28,000 சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. எவ்வித காரணமும் இன்றி முறையான அறிவிப்பு இல்லாமல் சொத்து வரியை 4 மடங்கு உயர்த்தி இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சொத்து உரிமையாளர்கள் வழங்கிய விவரங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற மறுஅளவீடு புவிசார் தகவல் அமைப்பு, செயற்கைக்கோள் படத் தரவுகளின் அடிப்படையில் சொத்து வரி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சொத்து வரி கடுமையாக உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சொத்துவரி மதிப்பீட்டு திருத்தம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் அல்லது ஆட்சேபனைகள் இருப்பின், சொத்து உரிமையாளர்கள் திருத்தப்பட்ட வரிமதிப்பீட்டு ஆணையினை பெற்ற தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார துணை ஆணையரிடம் தங்கள் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+