சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை ஈசிஆரில் பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப் படுகொலை. பகீர் சிசிடிவி காட்சிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிரபல ரவுடி பட்டபகலில் வெட்டிக்கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சென்னை நீலாங்கரை புது கணேஷ் நகர் 5வது தெரு சேர்ந்தவர் ஜெரோம் பிரபு 35. இவர் கடந்த ஒரு வருட காலமாக வீடு வாடகை எடுத்து மனைவி ஜாக்லின் 30 மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்பட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் பன்னிரண்டு முப்பது மணி அளவில் சேலம் பிரபு வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

சரமாரி வெட்டு

சரமாரி வெட்டு

அப்பொழுது அங்கு மறைந்து இருந்த 6 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக ஜெரோம் பிரபுவின் தலை மார்பு கைகளில் வெட்டி சாய்த்துவிட்டு, அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

அலறல் சத்தம்

அலறல் சத்தம்

இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த பொழுது ரத்தவெள்ளத்தில் கிடந்த ஜெரோம் பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிறகு நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீஸ்

விரைந்து வந்த போலீஸ்

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பிறகு அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

முன்விரோதம்

முன்விரோதம்

கொல்லப்பட்ட ஜெரோம் பிரபு மீது பாண்டிச்சேரியில் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளது அதில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலையால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனிடையே ஜெரோம் புதுச்சேரியில் ஒருவரை கொலை செய்ததாகவும் அதன் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

English summary
police released CCTV footage of rowdy hacked to death in broad daylight at Chennai ECR . 4 case pending On Rowdy in puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X