எஸ்ஆர்ஆம் கல்லூரி அடுத்த ஷாக்! விஷம் குடித்து மயங்கி சரிந்த மாணவன்! பார்சலில் வந்த சோடியம் சல்பேட்!
சென்னை : சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்ஆர்எம் கல்வி குழும கல்லூரியில் பிடெக் நான்காம் ஆண்டு படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில் ஆன்லைனில் விஷத்தை ஆர்டர் செய்து குடித்தது போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை அருகே காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் குழுமத்துக்குச் சொந்தமான எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் கடந்த சில வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்கள் இங்கு விடுதியில் தங்கி கல்லூரியில் பயின்று வருகின்றனர்.

எஸ்.ஆர்.எம் கல்லூரி
இந்த பல்கலைக்கழகத்தில் B.Tech., (Aerospace Engg) 4 ஆம் ஆண்டு படித்து வருபவர் நிகில் (21). கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தங்கியிருந்த விடுதி அறையில், ஏற்கனவே ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்று வைத்திருந்த சோடியம் சல்பேட் என்ற விஷத்தன்மை உடைய பொருளை தண்ணீரில் கலந்து குடித்துள்ளார்.

மாணவர் தற்கொலை
மேலும், சிறிது நேரம் கழித்து அதே விடுதியில் பக்கத்து அறையில் தங்கி உள்ள குஜராத்தை சேர்ந்த ஆதித்ய சௌத்ரி A/21 (B.Tech., Computer Science Engg) என்பவருக்கு போன் செய்து தான் விஷம் குடித்து விட்டதாக தகவல் சொல்லியுள்ளார். இதன் பேரில் ஆதித்ய சௌத்ரி நிக்கிலின் அறைக்கு சென்று பார்த்த போது நிகில் சோர்ந்து போய் அறையில் உள்ள கட்டிலில் இருந்துள்ளார்.

ஆன்லைனில் ஆர்டர்
தொடர்ந்து ஆதித்யா மூலம் நிகில் தனது பெற்றோர்களுக்கு போன் செய்து நடந்த விவரத்தை சொல்லியுள்ளார். தொடர்ந்து ஆதித்யா சோடா உப்பு கலந்து கொடுத்த போது நிகில் வாந்தி எடுத்துள்ளார். அதன் பிறகு அறையில் இருந்த மற்ற இரு நண்பர்களுடன் சேர்ந்து எஸ் ஆர் எம் மருத்துவமனை ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர வைத்து நிக்கிலை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பெற்றோர்கள் அதிர்ச்சி
பிறகு சிறிது நேரத்தில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் போது இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மறைமலைநகர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டாம் தேதி இதே கல்லூரியில் படித்து வந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முக்கிலு விஸ்வநாத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்த கல்லூரியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications