சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னது 2454 தெருக்களா! சென்னையில் தீவிரமாக பரவும் கொரோனா கேஸ்கள்! - விழிபிதுங்கும் மாநகராட்சி

By
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா தலைவிரித்தாடுகிறது. தலைநகர் சென்னையில் அதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் 2454 தெருக்களில் கொரோனா தீவிரமாக பரவி இருக்கிறது.

Recommended Video

    How to Select Mask?

    உலகமெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்தைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதேபோல் ஒமிக்ரான் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் நேற்று மட்டும் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக சென்னையில் மட்டும் ஒரே நாளில் 8978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு 29,15,948 ஆக உயர்ந்துள்ளது என‌ மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    156.76 கோடி டோஸ்கள்- கொரோனா தடுப்பூசி போட ஆரம்பிச்சு ஒரு ஆண்டு நிறைவு- பிரதமர் மோடி வாழ்த்து! 156.76 கோடி டோஸ்கள்- கொரோனா தடுப்பூசி போட ஆரம்பிச்சு ஒரு ஆண்டு நிறைவு- பிரதமர் மோடி வாழ்த்து!

    சென்னை

    சென்னை

    சென்னையில் புத்தாண்டுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது. சென்னையில் தற்போதுவரை 50 ஆயிரத்து 977 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. பொதுமுடக்கம் காரணமாக கொரொனா பரவல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை தெருக்கள்

    சென்னை தெருக்கள்

    சென்னையில் மொத்தம் 39,537 தெருக்கள் உள்ளது. இதில், 2,454 தெருக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 280 தெருக்களில் 10 முதல் 25 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 583 தெருக்களில் 6 முதல் 10 பேருக்கும், 1,591 தெருக்களில் 3 முதல் 5 பேருக்கும் நோய் தொற்று உள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

     மாநகராட்சி

    மாநகராட்சி

    சென்னை மாநகராட்சியில் சளி, இருமல் என கொரோனா அறிகுறியுடன் வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து வழங்கப்படுகிறது. அதில், வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் உள்ளிட்டவை இடம்பெறும். சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மேலும் பல முயற்சிகளை மாநகராட்சி மேற்கொள்ளவிருக்கிறது.

    இன்றைய பாதிப்பு

    இன்றைய பாதிப்பு

    சென்னையில் இன்று காலை நிலவரப்படி 54,685 பேர் கொரோனாவால் பாதிக்கப்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னையில் ஒருநாள் பாதிப்பு 9 ஆயிரத்தை நெருங்கவுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் ஒரு நாளில் மட்டும் 8,978 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,34,793-ஆக அதிகரித்துள்ளது

    செங்கல்பட்டு

    செங்கல்பட்டு

    தமிழகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,989 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 5,71,387-ஆக உயர்ந்துள்ளது.
    சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 6 பேர் உயிரிழந்தனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூரில், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

    English summary
    Corona impact continues to grow in the capital Chennai, the corona is spread over 2454 streets in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X