Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிதம்பரம் கோவில் ஒரு சாதியினருக்கு மட்டுமே சொந்தமானதல்ல...பொது சொத்தாக்க வேண்டும் - கி.வீரமணி

நீதியரசர்கள் முத்துசாமி ஐயர், ஷேப்பர்ட் அடங்கிய அமர்வு சிதம்பரம் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது அல்ல என தீர்ப்பு கொடுத்திருக்கிறது என்று கி வீரமணி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது அல்ல என்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் அதனை பொதுசொத்தாக அரசு அறிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய சர்ச்சை பல ஆண்டுகாலமாகவே நீடித்து வருகிறது. அது தங்களுக்கு சொந்தமானது என தீட்சிதர்கள் கூறி வருகின்றனர். தேவாரம் பாட மறுத்து வருவதால் தமிழ் அமைப்பினர் பலரும் போராட்டம் நடத்துகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் அர்த்தமண்டபத்தில் நுழைந்து தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமியை அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் அவர் கைகள் முறியும் அளவுக்கு அடித்து துவைத்தனர் தீட்சதர்கள். கைகள் முறிந்தாலும் தன் உயிரே போனாலும் பரவாயில்லை, சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடாமல் விடமாட்டேன் என பீனிக்ஸ் பறவையைபோல சிலிர்த்தெழுந்தார் அவர். தமிழை அர்த்தமண்டபத்தில் ஏற்ற களப்போராட்டம், சட்டப்போராட்டம் என தள்ளாத வயதிலும் தமிழுக்காக களமாடிய ஆறுமுகசாமிக்கு, கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடலாம் என்று அனுமதி வழங்கி ஆணையிட்டது. இதனையடுத்து, அவரை யானை மீது ஏற்றி அர்த்தமண்டபம் அழைத்து வந்தபோது, கோயில் வாசலில் வரிசைக்கட்டி நின்ற தீட்சதர்கள் தமிழ் பாட வரும் தமிழர்களை தடுக்க முயன்றனர். போலீசார் உதவியுடன் சிற்றம்பல மேடைக்கு சென்று 'நால்வர் மடத்தை' சேர்ந்த ஆறுமுகசாமி, சத்தியவேல் முருகன் உள்ளிட்டோர் தேவாரம் பாடி, அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் தமிழை தில்லைக்குள் அழைத்துச் சென்றனர்.

 கி.வீரமணி பேட்டி

கி.வீரமணி பேட்டி

இந்த நிலையில் சென்னையில் செய்தியளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, நீதிமன்றத்தின் கடந்தகால பல உத்தரவுகள் தில்லை நடராஜர் கோயில் 'பொது' சொத்து (Public Temple) என்றுதான் வந்திருக்கின்றதே தவிர, கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது என எங்கும் சொல்லவில்லை. 1885 -லேயே நீதியரசர்கள் முத்துசாமி ஐயர், ஷேப்பர்ட் அடங்கிய அமர்வு சிதம்பரம் கோயில் தீட்சதர்களுக்கு சொந்தமானது அல்ல என தீர்ப்பு கொடுத்திருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றதாகவும் கூறினார் கி. வீரமணி.

இந்து சமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை

அதன்பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பில் இருந்த கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் தொடர்ந்த வழக்கில் 2009 பிப்ரவரி 2ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற ஒரு நீதிபதி அமர்வு தீர்ப்பளித்தது. அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலை நிர்வகிக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல் அதிகாரியை நியமித்த தமிழக அரசின் உத்தரவு சரிதான் என்று கூறி, தீட்சதர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன்சுவாமியும் சில தீட்சதர்களும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில் 'தீட்சதர்களோ, அவர்களது மூதாதையர்களோ சிதம்பரம் கோயிலை கட்டவில்லை, அதனால் கோயிலின் மீது தீட்சதர்களுக்கு உரிமைக் கொண்டாட முகாந்திரம் இல்லை என கூறி, கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் கோயிலுக்கு செயல் அதிகாரியை நியமித்த உத்தரவு செல்லும்' எனவும் கடந்த 2009ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம் உத்தரவு

இதனையும் ஏற்றுக்கொள்ளமுடியாத தீட்சதர்களும், சுப்பிரமணியன்சுவாமியும் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளான பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே அடங்கிய அமர்வு, கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட அதிகாரி மேற்கொள்ளலாம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, கோயிலின் நிர்வாகத்தை மீண்டும் தீட்சதர்கள் வசமே ஒப்படைப்பதாக கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இதனால் கோவில் மீண்டும் தீட்சிதர்கள் வசமானது.

தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்

தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும்

இப்போது எழுச்சி நிலவுகிறது. தமிழர்களுக்கு சொந்தமான, தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சதர்களிடமிருந்து மீட்டு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர சட்டமன்றத்தில் தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழை மீண்டும் தில்லையம்பலத்தில் ஒலிக்கச் செய்ய உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தமிழர்களுக்கு சாதமான தீர்ப்பை பெற வேண்டும் என்றும் கி. வீரமணி கூறியுள்ளார்.

 தமிழுக்கு மறுப்பு

தமிழுக்கு மறுப்பு


தமிழை உள்ளே விடக்கூடாது என்று தகராறு நடத்துகிறார். தமிழக அரசு முன்பு போல சரியாக வாதாடி சிதம்பரம் கோவிலை பொதுமக்களுக்கு உரியதாக மாற்ற வேண்டும். அது தனிப்பட்ட சாதியினருக்கு மட்டும் சொந்தமானதல்ல இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்றும் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+