டிரம்ஸ் வாசித்து அசத்திய முதல்வர் ஸ்டாலின்- அருகே நின்ற வோர்கோவிச்சையும் அழைத்து.. ஒரே சிரிப்புதான்!
சென்னை : செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், டிரம்ஸ் சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார். அருகே நின்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்காடி வோர்கோவிச்சையும் டிரம்ஸ் வாசிக்க அழைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியது.
இசை நிகழ்ச்சியில் டிரம்ஸ் சிவமணி, வீணை இசைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, கீ போர்டு கலைஞர் ஸ்டீபன் தேவசி, புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஆகியோர் இணைந்து பல பாடல்களை இசைத்தனர்.
அப்போது முதல்வர் ஸ்டாலின், டிரம்ஸ் சிவமணியுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்த நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா
சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒல்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

கருப்பு சூட்டில் முதல்வர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா மேடையில் தமிழக முன்னாள் முதல்வர்களான ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரது படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கருப்பு சூட் அணிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். செஸ் ஒலிம்பியாட் நிர்வாகிகள், தமிழக அமைச்சர்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

பறக்கும் பியானோ
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, புல்லாங்குழல் நவீன்குமார், கீ போர்டு ஸ்டீபன் தேவசி ஆகியோர் சேர்ந்து ஒரே மேடையில் அசத்தினர். பறக்கும் பியோனோ, பறக்கும் ட்ரம்ஸ் என அந்தரத்தில் மிதந்தபடி இசைக்கருவிகளை இசைத்து கலைஞர்கள் அசத்தினர்.

டிரம்ஸ் வாசித்த முதல்வர் ஸ்டாலின்
டிரம்ஸ் வாசித்தபடியே மேடையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் இருந்த இருக்கை அருகே சென்றார் டிரம்ஸ் சிவமணி. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து அசத்தினார். முதல்வருக்கு அருகே நின்ற சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் அர்காடி வோர்கோவிச்சையும் டிரம்ஸ் வாசிக்க அழைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

ரசித்த ஸ்டாலின்
உடனே அவரும் வந்து டிரம்ஸ் வாசித்தார். முதல்வர் டிரம்ஸ் வாசித்ததை விழாவில் கூடியிருந்த அனைவரும் கைதட்டி ரசித்தனர். டிரம்ஸ் சிவமணியின் தாளத்திற்கு ஏற்ப டிரம்ஸ் வாசித்த அர்காடி வோர்கோவிச்சை சிரித்தபடி ரசித்த முதல்வர் ஸ்டாலின், கைலுக்கி பாராட்டினார்.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!











Click it and Unblock the Notifications