சட்சபையில் நேற்று ஸ்டாலின் பேசிய பேச்சு.. இன்று அனைத்து கட்சி கூட்டம்.. எல்லாமே சூப்பர் அணுகுமுறை
சென்னை: தமிழகத்தின் முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அணுகுமுறைகள் மூலம் அரசியல் கட்சியினரையும், அதிகாரிகளையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
நேற்று சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவை ஒரு நாணயத்தினுடைய இரு பக்கங்கள். இதில் ஒரு பக்கம் சரியாக இருந்து, மறுபக்கம் சிதைந்து போயிருக்குமென்று சொன்னால், அந்த நாணயம் செல்லாக் காசாகி விடும்' என்றார்.
இதை சுட்டிக்காட்டி முதல்வர் முக ஸ்டாலின் பேசுகையில், அண்ணாவின் தம்பிமார்கள்தான் நாங்கள். ஒரு மனிதனின் முகத்தில் உள்ள நிறைகளை மட்டுமல்ல, குறைகளையும் காட்டுவதுதான் கண்ணாடி. அதுபோல் ஆளுங்கட்சியினுடைய நிறை குறைகளை காட்டுவதுதான் சட்டமன்றம்' என்று சொன்னவர் யார் தெரியுமா? எங்கள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

ரசிக்க வைத்தது
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு. ஆனால், அதில் கர்வமோ, ஆணவமோ இருக்காது. ஜனநாயகமும், மரபுகளும் நிச்சயமாக அதிலே இருக்கும். எந்த காரணத்தை கொண்டும் ஆணவம் இருக்காது, கர்வம் இருக்காது. ஜனநாயகம்தான் இருக்கும். மரபுகளும் கடைப்பிடிக்கப்படும் என்று ஸ்டாலின் கூறினார். ஸ்டாலினின் இந்த பேச்சு சபையில் உள்ள அனைவரையும் ரசிக்க வைத்தது.

அழைத்து பேச விருப்பம்
இதேபோல் முக ஸ்டாலின் நேற்று இன்னொரு விஷயத்தையும் செய்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அதை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைத்து கட்சியினரையம் அழைத்து பேச விரும்பினார்.

மாலை 5மணிக்கு
அதன்படி இன்று மாலை 5 மணியளவில், தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக 2 பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் அழைப்பு
முன்னதாக கடந்த ஆட்சி காலத்தில் அனைத்து கட்சி தலைவர்களை ஒவ்வொரு முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் அவை பெரும்பாலான நேரங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் இந்த முறை யாரும் கோரிக்கை வைக்காமலேயே அவர் முக்கியமான கொரோனா பிரச்சனையில் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். இது அரசியல் கட்சி தலைவர்களையும், அதிகாரிகளையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

எல்லா சூப்பர் அணுகுமுறை
ஏனெனில் அதிகாரிகள் நியமனம் முதல், அமைச்சர்களை எச்சரித்தது வரை எல்லாவற்றிலும் நேர்மையான அணுகுமுறையை ஸ்டாலின் கடைபிடித்து வருகிறார். இதேபோல் சபாநாயகர் நியனத்திலும் ஸ்டாலினின் முடிவை பலர் வரை பாராட்டி வருகின்றனர். இதேபோல் கொரோனா தடுப்பூசியை உலகளாவிய டெண்டர் மூலம் இறக்குமதி செய்வது குறித்த நேற்றைய அறிவிப்பும் வரவேற்பை பெற்றுள்ளது.
-
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications