செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. ‘ஆளப்போறான் தமிழன்’ என மாஸாக என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை : மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. கருப்பு சூட் அணிந்து இந்த விழாவிற்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
Recommended Video
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நிறைவு விழா சற்று முன்பு தொடங்கியுள்ளது.

வெற்றி வீரர்களுக்கு பதக்கங்கள்
மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இதன் நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28-ஆம் தேதி நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரிசார்ட்டில் செஸ் போட்டிகள் நடந்து வந்தன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

நிறைவு விழா
இந்நிலையில், 12 நாட்கள் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவடைகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கருப்பு சூட் அணிந்து இந்த விழாவிற்கு வந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். ‘ஆளப்போறான் தமிழன்' பாடல் பின்னணியில் ஒலிக்காக மாஸாக என்ட்ரி கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தோனி வரவில்லை
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த விழாவில் தோனி பங்கேற்கவில்லை. தோனி இந்த விழாவுக்காக அமெரிக்காவில் இருந்து சென்னை வரவிருந்தார். ஆனால் அங்கிருந்து கிளம்புவது தாமதமானதால், அவர் சென்னை வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்கவில்லை.

கலைநிகழ்ச்சிகள்
நிறைவு விழாவின் தொடக்கமாக, சிறுவர் சிறுமியர், சில விநாடிகளில் ரூபிஸ் கியூப் சால்வ் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவில் 'ஹார்ட் பீட்ஸ் ஆஃப் இந்தியா' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இசைக் கலைஞர்கள் டிரம்ஸ் சிவமணி, ராஜேஷ் வைத்தியா , ஸ்டீபன், நவீன் ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications