தட்டாமலேயே திமுக ஆட்சியில் திறக்கப்படும் – கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஐந்தே மாதங்களில் செய்து முடித்து உள்ளதாகவும், தட்டாமலேயே திமுக ஆட்சியில் நலத்திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு பிறகு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.

எப்போது அழைத்தாலும் இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வேன் எனவும், அறிஞர் அண்ணா பிறந்தநாள், கலைஞர் கருணாநிதி பிறந்தநாள், பொங்கல், கிறிஸ்துமஸ் என எந்த விழாக்களில் பங்கேற்றாலும் அது தனக்கு மகிழ்ச்சிதான் என கூறினார்.

மதங்களுக்கு அடிப்படை ஒன்றுதான்

மதங்களுக்கு அடிப்படை ஒன்றுதான்

அனைத்து மதங்களுக்கும் அடிப்படை ஒன்றுதான் என்ற அடிப்படையில் தான் இங்கு வந்துள்ளதாகவும், 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய நலத்திட்டங்களை 5 மாதங்களில் செய்து காட்டி உள்ளோம் என கூறினார். வாக்காளர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே தனது இலக்கு என கூறிய முதல்வர், சிறுபான்மை மக்களுக்கு திமுகவை விட நன்மை செய்த கட்சிகள் தமிழகத்தில் இல்லை எனக் கூறினார்.

மக்களின் பாராட்டு

மக்களின் பாராட்டு

மேலும் திமுகவுக்கு வாக்களிக்க மக்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே தனது ஆசை எனவும் தற்போது வரும் பாராட்டுகள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் என் உழைப்புக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறைத்து வருவதாகவும் கூறினார்.

பதவி அல்ல வாய்ப்பு

பதவி அல்ல வாய்ப்பு

மக்கள் அளித்த முதலமைச்சர் பதவியை பதவியாக கருதவில்லை என்றும் மக்களுக்காகவே பணியாற்றும் வாய்ப்பு என கருதியே தான் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களையும் மக்களோடு மக்களாக நின்று இந்த ஆட்சியில் நிறைவேற்றி வருவதாகவும் மக்களை தேடி மருத்துவம் சாலை விபத்துகளில் நாற்பத்தி எட்டு மணி நேர சிகிச்சை உதவியை மக்கள் பெரும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார்.

தட்டாமல் திறக்கப்படும்

தட்டாமல் திறக்கப்படும்

தட்டுங்கள் திறக்கப்படும் என பைபிளில் கூறப்பட்ட வாசகத்தையும் விட தட்டாமலேயே மக்களுக்காக சிறுபான்மை மக்களுக்காக ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+