சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பார்த்துக்கோங்க.. இதுதான் ஸ்டாலின்.. கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார்.. சீறிய சேகர்பாபு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்து வகையிலும் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார் என்று அமைச்சர் சேகர்பாபு அதிரடியாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-ந் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி இந்து மத அமைப்பான ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆர்எஸ்எஸ் நிபந்தனைகளுடன் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். செப்.28ம் தேதிக்குள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இது தான் அதிர்ஷ்டம்.. வாங்கிய 3 லாட்டரிக்கும் பரிசு.. ஒரேநாளில் ரூ1.22 கோடிக்கு சொந்தக்காரரான தாத்தாஇது தான் அதிர்ஷ்டம்.. வாங்கிய 3 லாட்டரிக்கும் பரிசு.. ஒரேநாளில் ரூ1.22 கோடிக்கு சொந்தக்காரரான தாத்தா

ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி மறுப்பு

ஆர்எஸ்எஸ் பேரணி அனுமதி மறுப்பு

இந்த நிலையில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி தர இயலாது என தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு எண்ணிடப்பட்டால் நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பாஜக கண்டனம்

பாஜக கண்டனம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு விசிக, கம்யூனிஸ்ட், நாம் தமிழர், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேபோல் பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திராவிட மாடல்

திராவிட மாடல்

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சேகர்பாபு, எங்களைப் பொறுத்தவரை திராவிட மாடல் ஆட்சி என்பதை நாங்கள் ஒவ்வொரு நாளும் நிரூபித்து வருகிறோம்.

நேற்றுகூட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்தக் காலத்திலும் இல்லாத அளவிற்கு திருச்செந்தூரில் மேம்படுத்தப்பட்ட திருப்பணிகளுக்காக ரூ.300 கோடி செலவில், அத்திருக்கோயிலின் திருப்பணிகளை தொடங்கி வைத்துள்ளார். வட மாநிலங்களில் கூட ரூ.50 கோடி, ரூ.100 கோடி செலவில் திருப்பணிகள் செயயப்படும். இதுதான் திராவிட மாடல்.

சேகர்பாபு கருத்து

சேகர்பாபு கருத்து

கலகத்தை உண்டாக்குவது, பிரச்சினைகளை உண்டாக்குவது, இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பிளவுபடுத்துவது அல்ல திராவிட மாடல். உண்மையான திராவிட மாடலுக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா வகையிலும் கனிவாகவும் இருப்பார், இரும்பாகவும் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Minister Sekarbabu said, For Dravidian model governance Chief Minister M.K. Minister Stalin would be kind and strict in all ways.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X