இது நடந்தால்.. 'சென்னைக்கே ஹேப்பி'.. இந்த 2 ரூட் ரொம்ப முக்கியம்.. உடனே ஆரம்பிக்க சொன்ன ஸ்டாலின்
சென்னை : மீனம்பாக்கம் மற்றும் கிளாம்பாக்கம் இடையேயும், தாம்பரம் மற்றும் வேளச்சேரி இடையேயும் மெட்ரோ ரயில் பணிகளை உடனே ஆரம்பிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதில் வேளச்சேரி வழித்தடம் ஐடி பார்க் பகுதிகளான வேளச்சேரி, தரமணி, பெருங்குடியை இணைக்கக்கூடியது. கிளாம்பாக்கம் பாதை சென்னையில் புறநகர் பகுதியான செங்கல்பட்டு, மறைமலைநகர் பகுதிகளை இணைக்கக்கூடியது. இந்த இரண்டு பணிகளும் அடுத்த 4வருடங்களில் முடிக்கப்பட்டால் மிகப்பெரிய அளவில் மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.
ஏனெனில் மெட்ரோ ரயில்கள் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டாலும் சென்னையில் முக்கியமான வழித்தடங்களை இணைக்க கிளாம்பாக்கம் மற்றும் தாம்பரம் வழித்தடங்கள் முக்கியமாகும்.

பட்ஜெட்
தமிழக நிதிநிலை அறிக்கை விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக , துறைகள் வாரியாக செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், புதிய திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

உங்கள் தொகுதியில் முதல்வர்
அந்த வகையில் நேற்று வருவாய், சிறப்பு முயற்சிகள் துறைகள் தொடர்பானஆய்வுக்கூட்டங்கள் தலைமைச் செயலகத்தில் நடந்தது. வருவாய்த் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில். தாமதமின்றி மக்களின் கோரிக்கைகளை தீர்த்துவைக்க வேண்டும். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையால் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார்.

வேளச்சேரி- தாம்பரம்
இதேபோல் சிறப்பு முயற்சிகள் துறை ஆய்வுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, "உலகத்தரத்துக்கு இணையான பாதுகாப்புடன் விரைவாக பயணிக்கும் வகையில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல் கட்ட நீட்டிப்பில் அறிவிக்கப்பட்ட, மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான வழித்தடம் மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான வழித்தடப்பணிகளை விரைவாக செயல்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.

கிளாம்பாக்கம் பேருந்துநிலையம்
மீனம்பாக்கம்- கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னைவெளியேயே அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட வாயப்பு உள்ளது. அதாவது கிளம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைவரும் மெட்ரோ மூலம் நகருக்கு வர முடியும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கிளம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீடிக்கப்பட்டால் சென்னை எந்த பகுதிக்கும் மக்கள் எளிதாக வேலைக்கு சென்றுவர முடியும். கிட்டதட்ட புறநகர் பகுதிகளிலேயே குடியிருக்கலாம் என்ற எண்ணம் மக்களிடம் அதிகரிக்கும்.
Recommended Video

ஸ்டாலின் அதிரடி
இதேபோல் தாம்பரம்-வேளச்சேரி மெட்ரோ வழித்தடம் உடனே ஆரம்பிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். ஏனெனில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது. தாம்பரம் பல்லாவரம் குரோம்பேட்டை, வண்டலூர் , சேலையூர், பள்ளிக்கரணை பகுதிகளில் குடியிருந்தபடி பலரும் வேளச்சேரி, தரமணி மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனைவருக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். சென்னையின் புறநகரின் வளர்ச்சியில் இந்த இரண்டு வழித்தடங்களும் பெரும் பங்கு வகிக்கும் எனவே தான் இந்த இரணடு மெட்ரோ திட்டங்களை உடனே செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications