போதை ஒழிப்பு -சட்ட விரோத கடத்தல் தடுப்பு! துணிச்சலான 5 காவலர்களுக்கு பதக்கம் அறிவித்த முதலமைச்சர்!
சென்னை: சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு பதக்கம் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது "சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் / காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

அதனை தொடர்ந்து அரசாணை எண் 411, உள்( மிக)த் துறை, நாள் 03.08.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துறைக்கேற்ப கீழ்கண்டகாவல் அதிகாரிகள் / ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்பகிறது.
1வெ.பத்ரிநாராயணன், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்.
2.டோங்கரே பிரவின் உமேஷ், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்
3.மா.குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்.
4.சு.முருகன், காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்
5.இரா.குமார், முதல் நிலை காவலர்- 1380, நாமக்கல் மாவட்டம். இந்த விருதுகள் முதலமைச்சர் ஸ்டாலினால் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications