Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜூலை 18 தான் தமிழ்நாடு நாள்! நவம்பர் 1 இல்லை..! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என தீர்மானம் கொண்டு வந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நாளே தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டுதோறும் ஜூலை 18ஆம் தேதியன்று தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை மாகாணத்தை தமிழ் நாடு என தீர்மானம் கொண்டு வந்து சட்டசபையில் நிறைவேற்றிய நாளே தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் நவம்பர் 1ஆம் தேதி எல்லைகாக்க போராடிய தியாகிகளுக்கு தலா ரூ. 1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் எனவும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. மலையாளம் பேசும் மக்களும் கன்னடம் பேசும் மக்களும் தங்களுக்கென ஒரு மாநிலம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் ஒன்றாம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடிவருகின்றனர்.

 Chief Minister Stalin Says July 18 as Tamil Nadu Day

தமிழ்நாட்டில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அப்போதைய ஆளுங்கட்சியாக இருந்த தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மெட்ராஸ் மாகாணம் என்று ஆங்கிலேய ஆட்சியில் அழைக்கப்பட்டு, பின் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் கொண்டுவர அப்போதைய மெட்ராஸ் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு என்ற பெயர் இது அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லை. பல அறிஞர்கள், பொதுமக்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்றாகப் போராடியதால் தான் தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்தது. தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை பலரால் வைக்கப்பட்டு வந்தாலும், தமிழ்நாடு என்பது புதிய பெயர் அதற்கு கலாச்சாரப் பின்னணி இல்லை என்று தொடர்ந்து ஆட்சியாளர்கள் மறுத்து வந்தனர். 1956-ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி விருதுநகரைச் சேர்ந்த சங்கரலிங்கனார், மதராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்ற வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தார்.

அண்ணா, மா.பொ.சி, ஜீவா, கக்கன் போன்றவர்கள் சங்கரலிங்கனாரை சந்தித்து உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் தம் உண்ணாவிரதத்தில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில் 1956-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி உயிர் துறந்தார்.

1967ஆம் ஆண்டில் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திமுக 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலர் அண்ணா தமிழ்நாட்டின் முதல்வரானார். 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி அன்று சட்டசபையில் அண்ணா அவர்களால், சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கு அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்கிற தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நாளைத்தான் ஆண்டுதோறும் தமிழ்நாடு நாளாக கடைபிடிக்கப்படும் என்று அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.

எல்லைக்காக்க போராடிய தியாகிகளுக்கு ரூ. 1 லட்சம்

தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க போராடி சிறை சென்ற தியாகிகளை தமிழ்நாடு அரசு போற்றி கவுரவித்து வருகிறது. தற்போது எல்லைக்காவலர்கள் 110 பேர் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு மாதந்தோறும் 5500 ரூபாய் உதவித் தொகையும் மருத்துவப்படியாக 500 ரூபாயும் வழங்கப்படுகிறது. எல்லைக்காவலர்கள் மரபுரிமையாளர்களுக்கு 137 பேருக்கு உதவித்தொகையாக 3000 ரூபாய் மருத்துவப்படியாக 500 ரூபாய் அளிக்கப்படுகிறது. எல்லைப்போராட்டங்களில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்றவர்களுக்கு நவம்பர் 1ஆம் தேதியன்று தலா 1லட்சம் ரூபாய் பொற்கிழி அளித்து கௌரவிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+