சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“உங்களில் ஒருவன்..” முதல் முறையாக.. இம்மாதம் வெளியாகிறது முதல்வர் ஸ்டாலின் சுயசரிதை!

Google Oneindia Tamil News

சென்னை : இந்த மாத இறுதியில் உங்களில் ஒருவன் என்ற தனது சுயசரிதையை வெளியிடுவேன் எனவும், இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல திட்டம் ஒன்றை அறிவிப்பேன் சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாற்பத்தி ஐந்தாவது புத்தக கண்காட்சியில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆன "பபாசி" சார்பில் இந்த புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

 சென்னை திமுகவின் கோட்டையாம்.. அதில்தான் பாஜக ஓட்டை போடுதே.. அண்ணாமலை கலகல! சென்னை திமுகவின் கோட்டையாம்.. அதில்தான் பாஜக ஓட்டை போடுதே.. அண்ணாமலை கலகல!

சென்னை புத்தக கண்காட்சி

சென்னை புத்தக கண்காட்சி

சென்னையில் நடத்தப்படும் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சி ஆனால் இது மார்ச் மாதம் ஆறாம் தேதி வரை நடைபெற உள்ளது புத்தக கண்காட்சியில் 200 அரங்குகள் அமைக்கப்பட்டு காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த நிலையில் சென்னை புத்தகக் கண்காட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சென்னை, மதுரை, கோவை போல தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும், " பபாசி" புத்தக கண்காட்சியை நடத்த வேண்டும் எனவும் அதற்கான உதவிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ளும் என கூறினார். திராவிட இயக்கம் என்பது அறிவியக்கம் என்றும், திராவிட கழகத்தின் தலைமை அலுவலகத்தின் பெயர் அண்ணா அறிவாலயம் என்று கூறிய அவர் ஆண்டு ஆண்டுகளாக அடிமைப்பட்டு இருந்த தமிழ் சமூகத்திற்கு புத்தகங்கள் மூலம் அறிவை வளர்த்து திராவிட இயக்கம் என கூறினார்.

பரிசாக புத்தகங்கள்

பரிசாக புத்தகங்கள்

தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தின் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயம் தமிழ் பேசும் தகுதி தேர்வு நடத்தப்படும் எனவும் அரசு ஊழியர்கள் தமிழ் மொழியில் கையெழுத்திடுவது கோப்புகளை தமிழில் எழுவதை அரசு ஊக்குவித்து கொண்டிருக்கிறது என்றார். பொது நிகழ்ச்சிகளில் தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட சுமார் ஒன்றரை லட்சம் புத்தகங்கள் இலங்கை யாழ்ப்பாண நூலகம் மற்றும் தமிழகத்தில் உள்ள சிறு நூலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.

முதல்வரின் சுயசரிதை

முதல்வரின் சுயசரிதை

உங்களில் ஒருவன் எனும் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன் எனவும் சுயசரிதையான அந்த புத்தகம் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்றார். என்னுடைய வாழ்க்கையில் நான் சந்தித்த மிக முக்கிய நிகழ்வுகள் தொடங்கிய போராட்டம் வரை புத்தகங்களில் இடம் பெற்றிருக்கும் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். விரைவில் 45 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் விற்பனைக்கு வைக்கப்படும் எனவும் புத்தகக் காட்சியில் நல்ல திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என தான் விரும்பியதாகவும், ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக அறிவிக்க முடியவில்லை, இரண்டு நாட்களில் மக்களுக்கான நல்ல செய்தியை வெளியிடுவேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

பொற்கிழி விருதுகள்

பொற்கிழி விருதுகள்

முன்னதாக கலைஞர் கருணாநிதி பொருட்களை விருதுகள் மற்றும் பபாசி விருதுகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். உரைநடை கான கலைஞர் பொற்கிழி விருது பத்திரிக்கையாளர் சமஸ், நாடகத்திற்கான பொற்கிழி விருது பிரசன்னா ராமாசி, கவிதைக்கான பொற்கிழி விருது ஆசைத்தம்பி உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது.

English summary
Chief Minister Stalin has said that he will publish his autobiography as one of you later this month and will announce a good plan for the people in two days by launching the Chennai Book Fair.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X