தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. கண் கலங்கி அழுத ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த தேனிசை தென்றல் தேவா உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா உள்பட அவரது குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் கூறினார்.

தேனிசை தென்றல் என்று அழைக்கப்படும் இசை அமைப்பாளர் தேவா இன்று காலமானார். 76 வயதான தேவாவுக்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

CM Vijay pays his last respects to Deva in person consoles to tearful Srikanth Deva

சென்னை தியாகராய நகர் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக தேவாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள், திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நேரில் வந்து தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தமிழக முதல்வர் விஜய்யும் நேரில் வந்து தேவா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவை இறுகப்பற்றி விஜய் ஆறுதல் தெரிவித்தார். தேவாவின் குடும்பத்தினருக்கும் முதல்வர் விஜய் ஆறுதல் தெரிவித்தார். தமிழக முதல்வர் விஜய் தேவா உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என கூறியதற்கு ஸ்ரீகாந்த் நன்றி தெரிவித்தார். தேவாவின் உடல் நாளை ஆற்காலில் உள்ள நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

முதல்வர் விஜய்க்கு தேவா பல படங்களில் இசையமைத்துள்ளார். தேவா இசையில் மட்டும் முதல்வர் விஜய் தொட்டபேட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, தங்க நிறத்துக்கு தான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா.. என்பது உள்பட 10-க்கும் மேற்பட்ட பாடலை தன் சொந்த குரலால் பாடியுள்ளார். அதுமட்டுமின்றி குஷி, மின்சாரக்கண்ணா உள்ளிட்ட படங்களிலும் தேவா இசையமைத்துள்ளார். தெறி படத்தில் ஜித்து ஜில்லாடி என்ற ஒரு பாடலை தேவா பாடியிருப்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+