• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ரொனால்டோ தில்லு.. இங்க யாருக்காச்சுச்சும் இருக்கா பாஸ்.. வைரலாய்ட்டாரு பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: வெளிநாட்டு குளிர்பானங்களை பாட்டிலை உடைச்சு வாயில் ஊற்றுவதற்கு கொஞ்சமும் சங்கோஜப்படாத பிரபலங்களுக்கு மத்தியில், தூக்கித் தூரப் போட்டு பல ஆயிரம் கோடி இழப்பை ஏற்படுத்தி விட்டு படு கேஷுவலாக ஹங்கேரியை ஒரு உதை உதைத்து ஈரோவிலும் மாஸ் காட்டியுள்ளார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

  Cristiano Ronaldo செய்த செயலால் Coco Cola companyக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்

  கால்பந்து வீரர்களிலேயே ரொனால்டோ ஒரு தனி ரகம்.. இப்படித்தான் வாழ்வேன் என்று கோடு போட்ட அந்த லைனைத் தாண்டாமல் ஜம்மென்று பயணிக்கும் ஒரு புயல் இவர்.

  உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட லியோனல் மெஸ்ஸி, நெய்மார் ஆகியோருக்கு இணையாக இவருக்கும் அதிக ரசிகர்கள் உண்டு. உண்மையில் மெஸ்ஸி, நெய்மாரைக் கூட நம்ப முடியாது.. ஆனால் ரொனால்டோவை நம்பலாம். அந்த அளவுக்கு கோல் போடுவதில் கிங்.

  தெறி ஆட்டம்

  தெறி ஆட்டம்

  ரொனால்டோவின் ஆட்டம் சும்மா வெறித்தனமாக இருக்கும் என்பதை நேற்று ஒரு டிரெய்ரல் போட்டு அவரே காட்டி விட்டு போய் விட்டார்.. ஆடிப் போய்க் கிடக்கிறது கோகோ கோலா நிறுவனம். லிஸ்பன் பிரஸ்மீட்டின்போது அவர் கோகோ கோலோ பாட்டில்களைத் தூக்கி தூரப் போட்டு விட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்து, கோக்கை விடுங்க, இதைக் குடிங்க என்று ஒரு மெசேஜை போட்டபோது உலகமே ஆடிப் போய் விட்டது. குறிப்பாக கோக் தள்ளாடிப் போய் விட்டது.

  ரொனால்டோ தாக்கம்

  ரொனால்டோ தாக்கம்

  ரொனால்டோ போன்ற பிரபலங்கள், சூப்பர் ஸ்டார்கள் ஏதாவது செய்தால் அது எந்த அளவுக்கு பாதிப்பை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கோக் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிவு நிரூபித்துள்ளது. ஒரே நாளில் ரூ. 30,000 கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தி விட்டதாம் ரொனால்டோவின் "பாட்டில் வீச்சு". அதை விட முக்கியமாக ரொனால்டோவின் ரசிகர்கள் அவரது இந்த செயலை கொண்டாடி வருகின்றனர்.

  டிரெண்ட் ஆனார்

  டிரெண்ட் ஆனார்

  டிவிட்டரில் ரொனால்டோ டிரண்டாகி விட்டார். அவரது ரசிகர்கள் தலைக்குத் தில்லு பார்த்தியா என்று கோக் விவகாரத்தை பாராட்டுவது ஒரு பக்கம் என்றால், ஹங்கேரி அணிக்கு எதிரான அவரது ஈரோ போட்டி ஆட்டத்தைப் பற்றி சிலாகித்து இன்னொரு பக்கம் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர். மற்ற கால்பந்து ஸ்டார்களை விட அதிகம் பேசாமல் காரியத்தில் கண்ணாக இருப்பவர் ரொனால்டோ.

  ரொனால்டோ முத்திரை

  ரொனால்டோ முத்திரை

  கோல் போடுவதிலும் சரி, நல்ல விஷயங்கள் செய்வதிலும் சரி ரொம்பவே அடக்கமாக இருப்பார்.. அதேசமயம், ஆணித்தரமாக தனது முத்திரையைப் பதிக்கத் தவறுவதில்லை. இப்போதும் கூட அப்படித்தான் செய்துள்ளார் ரொனால்டோ. ஆனால் பல பிரபலங்களிடம் இதை நாம் பார்க்க முடிவதில்லை. வெளிநாட்டு மோகத்தில் மூழ்கி முத்தெடுக்க விரும்புபவர்களே அதிகம்.

  பெருமை பீத்தல் ஸ்டார்கள்

  பெருமை பீத்தல் ஸ்டார்கள்

  நம்ம நாட்டையே எடுத்துக்கங்க.. எத்தனை பிரபலங்கள் உள்ளனர்.. சினிமா, விளையாட்டு என எல்லாவற்றிலும் பார்த்தால் உள்ளூர் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக இருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். எல்லோருமே வெளிநாட்டு பாட்டில்களை (குளிர்பானோ அல்லது மது பானமோ) கையில் ஏந்திக் கொண்டு புன்னகை புரியவே விரும்புகிறார்கள். ஆனால் கோகோ கோலாவை தனது லெப்ட் ஹேன்ட்டால் அழகாக ஹேன்டில் செய்து காலி செய்துள்ளார் ரொனால்டோ.

  முன்பு இருந்தார்

  முன்பு இருந்தார்

  ஒரு காலத்தில் எல்லோரையும் போலவேதான் விளம்பரப் படங்களில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார் ரொனால்டோ. ஏன் கோக் விளம்பரத்திலேயே கூட அவர் நடித்தும் உள்ளார். ஆனால் கோக் குறித்த விழிப்புணர்வு அவருக்கு வந்த பிறகு அதுபோன்ற விளம்பரங்களில் அவர் நடிப்பதில்லை. சுத்தமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டார். கோக் மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கக் கூடிய விஷயங்களை அவர் திரும்பிக் கூட பார்ப்பதில்லை. அதில் அவர் ரொம்பவே உறுதியாக இருக்கிறார்.

  நம்மாட்களுக்கு தில்லு இருக்கா

  நம்மாட்களுக்கு தில்லு இருக்கா

  கோக், பெப்சி போன்ற குளிர்பானங்களுக்காக தேவைப்படும் தண்ணீரின் அளவு மிக மிக மிக அதிகம். நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக கோக் ஆலைக்கு தண்ணீர் எடுக்க அனுமதிக்கப்பட்டது அங்கு புயலைக் கிளப்பியது. கோக்கைத் தடுக்க மக்கள் போராடினர்.. ஆனாலும் பயன் இல்லை. குடிக்க நீரின்றி மக்கள் தவிக்கும் நிலையில் குளிர்பானத்திற்கு இத்தனை லட்சம் லிட்டர் தண்ணீரா என்ற ஆதங்கம் எழுந்தது. ஆனால் கார்ப்பரேட் பவரை எதிர்க்கு சாமானிய மக்களுக்கு வலு இருப்பதில்லை. இது மாதிரியான சமயங்களில்தான் ரொனால்டோக்கள் மக்களுக்குத் தேவைப்படுகிறார்கள்.

  English summary
  Christiano Ronaldo's removal of Coco Cola bottles has impacted the Cool drinks company a big loss. Fans now expect, Will Indian stars do the same like Portugal star here too?.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X