கோபப்பட்ட “ஜிவிஎம்”.. நெகட்டிவா? விமர்சகர்களுக்கு “சுதந்திரம்” தேவை - “கூலாக” பதிலளித்த வெற்றிமாறன்
சென்னை: திரைப்படங்களை விமர்சிப்பது அவரவரின் சுதந்திரம் என்றும் பாதகமான விமர்சனம் என்றாலும் அவர்கள் நினைப்பதை சொல்வதில் தவறில்லை எனவும் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
முன்பெல்லாம் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதற்கு முன், நாளிதழ்கள், வார இதழ்கள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சினிமா விமர்சனங்களை பார்த்து மக்கள் திரையரங்குகளுக்கு செல்வதை பற்றி முடிவு செய்வார்கள்.
ஆனால், இணையதளம் வளர்ந்த பிறகு யூடியூப்பில் சினிமா விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. மக்களும் யூடியூபில் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை பார்த்து படம் பார்க்கத் தொடங்கினர்.

சினிமா விமர்சகர்கள்
இப்படி யூடியூபில் தமிழ் சினிமாக்களை விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் மேல் சென்றுவிட்டாலும், குறிப்பிட்ட சிலருடைய சேனல்களை மட்டுமே மக்கள் அதிகம் பின்பற்றி வருகின்றனர். அவர்களில் முதன்மையானவர் ப்ளூ சட்டை என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் மாறன்.

கவுதம் வாசுதேவ் மேனன்
அண்மையில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு மாறன் மிக மோசமான விமர்சனத்தை வழங்கி இருந்தார். இது குறித்து ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டதுபோது, பதிலளித்த கவுதம் கோபமடைந்து இறங்கு ஏதாவது செய்துவிடலாம் என்று தோன்றுகிறது எனக் கூறினார்.

தீர்மானம்
இதற்கிடையே திரைப்படம் வெளியாகி 3 நாட்களுக்கு பிறகே சினிமா விமர்சனங்களை வெளியிட வேண்டும் என தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதற்கும் விமர்சகர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் வெற்றிமாறனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.

வெற்றிமாறன் பேச்சு
இதற்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பதிலளித்த அவர், "அது அவர்களுடன் சுதந்திரம். நெகட்டிவாக இருக்கிறது என்றால், அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை சொல்கிறார்கள். விமர்சகர்களுக்கான சுதந்திரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அது என்னவாக இருந்தாலும் சரி. படத்தை பற்றி பேசும்போது அவர்களுக்கு அந்த சுதந்திரம் இருக்கிறது." என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications