கள்ள ஓட்டு போட முயற்சி என புகார்.. சென்னை ஆழ்வார்பேட்டையில் திமுக - பாஜக இடையே தள்ளுமுள்ளு
சென்னை: சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜக - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஐடி கார்டு இல்லாமல் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியற்கு திமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பும் பலப்படுத்தபட்டுள்ளது.

இதற்கிடையே, சென்னை மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜக - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் பள்ளி அமைக்கப்பட்டுள்ள 13 வது வாக்குச்சாவடியில் அந்த தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை முன்பாகவே பாஜகவினர் - திமுகவினர் இடையே வாக்கு வாதமும் தொடர்ச்சியாக லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
ஐடி கார்டு இல்லாமல் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியற்கு திமுக முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜகவினர் - திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதிமுகவினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினருடன் இணைந்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். மயிலாப்பூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழிசை சவுந்தரராஜனும், திமுக சார்பில் தா வேலுவும் போட்டியிடுகிறார்கள். திமுக மற்றும் பாஜகவினர் இடையேயான வாக்குவாதத்தால் ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலை பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications